கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கல்யாணராமன் ஜாமின் மனு தள்ளுபடி

Added : அக் 27, 2021
Share
Advertisement
சென்னை:தமிழக பா.ஜ., செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழக பா.ஜ., செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன். இவர் தன் 'டுவிட்டர்' பக்கத்தில், மக்களிடையே மோதல், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில், சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிடுவதாக, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் கோபிநாத் என்பவர்,

சென்னை:தமிழக பா.ஜ., செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக பா.ஜ., செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன். இவர் தன் 'டுவிட்டர்' பக்கத்தில், மக்களிடையே மோதல், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில், சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிடுவதாக, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் கோபிநாத் என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

கடந்த 16ம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசார், கல்யாணராமனை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமின் கேட்டு அவர் தாக்கல் செய்த மனுவை, ஜார்ஜ் டவுன் பெருநகர குற்றவியல் மூன்றாவது நடுவர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.கல்யாணராமன் மீது, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், ஜாமின் கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், கல்யாணராமன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆர்.செல்வகுமார் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு உள்ளதால், அவரது ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, அரசு தரப்பில் வாதிடப்பட்டது.இதையடுத்து, கல்யாணராமன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X