சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எண்ணுாரில் பதுங்கியிருந்த ஜார்கண்ட் மாநில மாவோயிஸ்ட் கைது

Added : அக் 27, 2021
Share
Advertisement
சென்னை:எண்ணுார் அனல் மின் நிலையம் அருகே பதுங்கி இருந்த, கொலை, வெடிகுண்டு வீச்சு உட்பட, 14க்கும் மேற்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.நாட்டில் சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில், 'நக்சலைட், மாவோயிஸ்ட்'களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இவர்களின் ஆதிக்கத்தை
 எண்ணுாரில் பதுங்கியிருந்த  ஜார்கண்ட் மாநில மாவோயிஸ்ட் கைது

சென்னை:எண்ணுார் அனல் மின் நிலையம் அருகே பதுங்கி இருந்த, கொலை, வெடிகுண்டு வீச்சு உட்பட, 14க்கும் மேற்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நாட்டில் சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில், 'நக்சலைட், மாவோயிஸ்ட்'களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இவர்களின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்மாநில முதல்வர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன், சமீபத்தில் டில்லியில் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில், நக்சலைட் மற்றும் மாவோயிஸ்ட்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. சில மாதங்களாக, வட மாநிலங்களில் பதுங்கி இருக்கும் மாவோயிஸ்டுகள், கட்டட தொழிலாளிகள் போல, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், ஜார்க்கண்ட் மாநிலம், அசாரிபாக் மாவட்டம், பூச்சாட்டிக் கிராமத்தைச் சேர்ந்தவர் சுகார் கஞ்ச், 30, என்ற மாவோயிஸ்ட் ஆறு மாதங்களுக்கு முன், ரயிலில் சென்னை எண்ணுார் வந்துள்ளார்.'சென்ட்ரிங்' தொழிலாளி போல வந்த இவர், எண்ணுார் அனல் மின் நிலையம் அருகே, குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டுமான பணியில், சுரேஷ் என்ற ஒப்பந்ததாரர் வாயிலாக வேலைக்கு சேர்ந்து உள்ளார்.

இவருக்கு திருமணமாகி மனைவி, மகன், மகள் உள்ளனர்.சுகார் கஞ்ச், ஜார்க்கண்ட் மாநில போலீசாரால் தேடப்பட்டு வரும் மாவோயிஸ்ட். அம்மாநிலத்தில் அதிதீவிரமாக செயல்படும், தீபக் காம்ரேட் என்ற மாவோயிஸ்ட் அணியைச் சேர்ந்தவர்.இவர் மீது, ஜார்க்கண்ட் மாநிலத்தில், 2 கொலை, 3 வெடிகுண்டு வீச்சு, 2 கொலை முயற்சி உட்பட, 14க்கும் மேற்பட்ட வழக்கு கள் உள்ளன.

காடுகளில் ஆயுத பயிற்சி செய்யும் மாவோயிஸ்ட்டுகளுக்கு சமையல் செய்து தந்தவர். கொலை வழக்கில், ஜார்க்கண்ட் மாநில நீதிமன்றம், சுகார் கஞ்ச்க்கு 'பிடிவாரன்ட்' பிறப்பித்து இருந்தது. போலீசார் தன்னை தேடுவதை அறிந்த இவர், எண்ணுார் அனல் மின் நிலையம் அருகே பதுங்கி, கட்டட தொழிலாளி போல, வேலை பார்த்து வந்தார்.

இவர், மொபைல் போன் வாயிலாக, சொந்த ஊரில் இருக்கும் மனைவிக்கு பேசியதை ஜார்க்கண்ட் மாநில போலீசார் கண்டறிந்தனர். விசாரணையில், சுகார் கஞ்ச் மொபைல் போன் சிக்னல் டவர், எண்ணுார் அனல் மின் நிலைய பகுதியை காட்டியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அம்மாநில போலீசார், சுகார் கஞ்ச் படத்துடன், தமிழக டி.ஜி.பி., சைலேந்திரபாபுவுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்படி, எண்ணுார் உதவி கமிஷனர் பிரம்மானந்தம் தலைமையிலான தனிப்படை போலீசார், சுகார் கஞ்சை தேடினர். குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டுமான பகுதியில் பதுங்கி இருந்த அவரை, சுற்றி வளைத்தனர். போலீசாரை பார்த்ததும் தப்பிக்க முயன்றார்.

மேலும், அரசு அதிகாரத்திற்கு எதிராக ஹிந்தியில் கோஷமிட்டார். போலீசார் இவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சென்னையில் இவர் எவ்வித சதி திட்டத்திலும் ஈடுபடவில்லை என, போலீசார் கூறுகின்றனர்.தமிழகத்தில் வழக்கு ஏதும் இல்லை என்பதால், ஜார்க்கண்ட் மாநில போலீசாரிடம், அவரை ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X