காங்கிரஸ் பாதை மாறியுள்ளது:மாநில பா.ஜ., தலைவர்

Added : அக் 27, 2021
Share
Advertisement
பாகல்கோட்:''காந்தி உருவாக்கிய காங்கிரஸ் இன்று பாதை மாறியுள்ளது. மல்லிகார்ஜுன கார்கே, பரமேஸ்வரின் கண்ணீரில் காங்கிரஸ் அடித்து செல்லப்படும்,'' என மாநில பா.ஜ., தலைவர் நளின்குமார் கட்டீல் தெரிவித்தார்.மாநில காங்., தலைவர் சிவகுமார், ஊடகத்தினரிடம், 'எடியூரப்பா கண்ணீரில், பா.ஜ., அடித்து சென்றுள்ளது' என கூறியிருந்தார்.இவருக்கு பதிலடி கொடுத்து, மாநில பா.ஜ., தலைவர் நளின்

பாகல்கோட்:''காந்தி உருவாக்கிய காங்கிரஸ் இன்று பாதை மாறியுள்ளது. மல்லிகார்ஜுன கார்கே, பரமேஸ்வரின் கண்ணீரில் காங்கிரஸ் அடித்து செல்லப்படும்,'' என மாநில பா.ஜ., தலைவர் நளின்குமார் கட்டீல் தெரிவித்தார்.

மாநில காங்., தலைவர் சிவகுமார், ஊடகத்தினரிடம், 'எடியூரப்பா கண்ணீரில், பா.ஜ., அடித்து சென்றுள்ளது' என கூறியிருந்தார்.இவருக்கு பதிலடி கொடுத்து, மாநில பா.ஜ., தலைவர் நளின் குமார் கட்டீல், கூறியதாவது:எடியூரப்பாவின் கண்ணீரை விட, மல்லிகார்ஜுன கார்கே, பரமேஸ்வரின் கண்ணீர் அதிகம்.

முதல்வராக்கவில்லை என கார்கேவும், தேர்தலில் தோற்கடித்ததால் பரமேஸ்வரும் கண்ணீர் விட்டனர். இவ்விருவரின் கண்ணீரில், காங்கிரஸ் சர்வ நாசமாகும்.சித்தராமையா முதல்வராக, சிவகுமார் விட மாட்டார்; மாநில காங்., தலைவர் பதவியில், சிவகுமார் நீடிக்க, சித்தராமையா விட மாட்டார். முதல்வர் நாற்காலிக்காக, இவ்விரு தலைவர்களும் போட்டி போடுகின்றனர்.

இடைத்தேர்தல் முடிந்த பின், காங்கிரஸ் இரண்டாக உடையும்.ம.ஜ.த., கட்சி பா.ஜ.,வின், 'பி டீம்' என, காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்தனர். குமாரசாமியை முதல்வராக்கியது யார்... பெங்களூரு மாநகராட்சியில், கூட்டணி வைத்தது யார்... மைசூரு மாநகராட்சியில் கூட்டணி வைத்தது யார்?காங்கிரசில் இருப்பவர், ம.ஜ.த.,வுக்கு வருவார்கள், இங்கு இருப்பவர் அங்கு செல்வர். காங்கிரசின் 'பி டீம்' ம.ஜ.த., கட்சி தான்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X