கொரோனா தடுப்பூசி:வயலில் பதுங்கிக்கொண்ட கிராமத்தினர்

Added : அக் 27, 2021
Share
Advertisement
சித்ரதுர்கா:கொரோனா தடுப்பூசி பெறும்படி விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகள் சென்ற போது, ரத்னகிரி ஹட்டி கிராமத்தில் சிலர், பின் வாசல் வழியாக ஓடி, மக்காசோளம் வயலில் பதுங்கிக் கொண்டனர்.சித்ரதுர்கா செல்லகரேவின், நன்னிவாளா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட, ரத்னகிரிஹட்டி கிராமத்தினர், கொரோனா தடுப்பூசி போட மறுத்து வருகின்றனர்.சுகாதாரத்துறை ஊழியர்கள் தைரியம் கூறியும்

சித்ரதுர்கா:கொரோனா தடுப்பூசி பெறும்படி விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகள் சென்ற போது, ரத்னகிரி ஹட்டி கிராமத்தில் சிலர், பின் வாசல் வழியாக ஓடி, மக்காசோளம் வயலில் பதுங்கிக் கொண்டனர்.

சித்ரதுர்கா செல்லகரேவின், நன்னிவாளா கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட, ரத்னகிரிஹட்டி கிராமத்தினர், கொரோனா தடுப்பூசி போட மறுத்து வருகின்றனர்.சுகாதாரத்துறை ஊழியர்கள் தைரியம் கூறியும் பலனில்லை. கிராமத்தினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, இரு நாட்களுக்கு முன், அதிகாரிகள் கிராமத்துக்கு சென்றனர்.

இவர்கள் தடுப்பூசி வந்திருப்பதாக நினைத்து பயந்த சிலர், வீட்டுக்குள் சென்று, கதவை தாழிட்டுக்கொண்டனர். மேலும் சிலர் பின் வாசல் வழியாக ஓடி, மக்காச்சோளம் வயலில் பதுங்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. பலத்த முயற்சிக்கு பின், சிலர் மட்டுமே தடுப்பூசி பெற்றனர்.

சுகாதார அதிகாரி ஒருவர், கூறியதாவது:செல்லகரே நகரை ஒட்டியுள்ள, நன்னவாளா கிராம பஞ்சாயத்து எல்லையில், பல கிராமங்கள் உள்ளன. பலரும் எஸ்.டி., சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் இன்றைக்கும், மூட நம்பிக்கைகள், முன்னோர்களால் வந்துள்ள நடைமுறைகளில் ஊறியுள்ளனர்.இவர்களுக்கு கொரோனா தடுப்பூசி குறித்து, பயம், மூட நம்பிக்கை உள்ளது. பலரும் தடுப்பூசி போட மறுக்கின்றனர்.

இதையறிந்த மூத்த சிவில் நீதிபதி ரேஷ்மா கலகப்பா கோனே, நீதிபதி கவுடா ஜெகதீஷ் உட்பட, அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வந்தனர். அவர்களை பார்த்ததும் கிராமத்தில் சிலர் பயந்து ஓடினர். கதவை திறக்கும்படி கூறியதும் பின்வாசல் வழியாக ஓடி, வயலில் பதுங்கிக் கொண்டனர். நீதிமதி ரேஷ்மா, அதிகாரிகளுடன் வீடுகளுக்கு சென்று, 'நாங்களும் கூட, இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றுள்ளோம்,' என கூறிய பின், 10 முதல் 12 பேர், தடுப்பூசி பெற்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X