குருபர் சமுதாயத்துக்குசித்தராமையாவின் பங்களிப்பு பூஜ்யம்:பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத்

Added : அக் 27, 2021
Share
Advertisement
மைசூரு:''குருபர் சமுதாயத்துக்கு, சித்தராமையாவின் பங்களிப்பு பூஜ்யம். இவரால் இந்த சமுதாயத்துக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை," என பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத் தெரிவித்தார்.மைசூரில் அவர் கூறியதாவது:ஹனகல் இடைத்தேர்தலில் பிரசாரம் செய்த போது, குருபர், கம்பளி என, தேவையற்ற விஷயங்களே அதிகமாக பேசப்படுகிறது. தேவையற்ற விஷயங்களே, மக்களை அதிகமாக துாண்டுகிறது.காகிநெலே

மைசூரு:''குருபர் சமுதாயத்துக்கு, சித்தராமையாவின் பங்களிப்பு பூஜ்யம். இவரால் இந்த சமுதாயத்துக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை," என பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத் தெரிவித்தார்.

மைசூரில் அவர் கூறியதாவது:ஹனகல் இடைத்தேர்தலில் பிரசாரம் செய்த போது, குருபர், கம்பளி என, தேவையற்ற விஷயங்களே அதிகமாக பேசப்படுகிறது. தேவையற்ற விஷயங்களே, மக்களை அதிகமாக துாண்டுகிறது.

காகிநெலே மடத்துக்கு யார் வந்தாலும், கம்பளி போர்த்தி கவுரவிப்பது வழக்கம். அதுபோன்று முதல்வர் பசவராஜ் பொம்மைக்கும், கம்பளி போர்த்தினர். இதற்கு எந்த அர்த்தமும் கற்பிக்க வேண்டாம். இதையே சித்தராமையா பெரிய குற்றமாக பேசுகிறார்.ஆடு, கம்பளி சமுதாயத்தின் சொத்தாகும். எந்த ஜாதியின் சொத்துமல்ல. சித்தராமையா குருபர் சமுதாயத்தை, திசை திருப்ப முயற்சிக்கிறார். இதனால் குருபர்கள் தன்னந்தனியாக ஆகும் அபாயம் உள்ளது. அந்த இனத்திற்கு சித்தராமையாவின் பங்களிப்பு எதுவும் இல்லை.

அவரால் அந்த சமுதாயத்திற்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.இதை மனதில் கொண்டு, சித்தராமையா பேச வேண்டும். இவர் பிரதமரையும், முதல்வரையும் ஏக வசனத்தில் பேசுவது சரியா. இதே போன்று, ராகுல், சோனியாவை பேசுங்கள் பார்க்கலாம்.தொடர்ந்து இதே போன்று பேசினால், நீங்கள் அரசியலில் தனியாளாக ஆகிவிடுவீர்கள். இவருக்கு நன்றிக்கடன் என்பதே இல்லை. நன்றியே இல்லாத தலைவர் என்றால், அது இவர் தான். சித்தராமையா பேச்சு, சமுதாயத்தை பாதிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X