போன் ஒட்டு கேட்பு விவகாரத்தை விசாரிக்க நிபுணர் குழு!: 'பெகாசஸ்' வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி

Updated : அக் 29, 2021 | Added : அக் 27, 2021 | கருத்துகள் (16+ 28)
Share
Advertisement
போன் ஒட்டு கேட்பு விவகாரத்தை விசாரிக்க நிபுணர் குழு! தேச பாதுகாப்பு காரணம் என கூறுவதை ஏற்க மறுப்பு 'பெகாசஸ்' வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடிபுதுடில்லி :'பெகாசஸ்' மென்பொருள் மூலமாக போன் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரம் தொடர்பாகவிசாரிக்க, மூன்று பேர் நிபுணர் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையை, ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன்
ஒட்டு கேட்பு, நிபுணர் குழு! காசஸ்', உச்ச நீதிமன்றம்

போன் ஒட்டு கேட்பு விவகாரத்தை விசாரிக்க நிபுணர் குழு! தேச பாதுகாப்பு காரணம் என கூறுவதை ஏற்க மறுப்பு 'பெகாசஸ்' வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடில்லி :'பெகாசஸ்' மென்பொருள் மூலமாக போன் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரம் தொடர்பாகவிசாரிக்க, மூன்று பேர் நிபுணர் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையை, ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் கவனிப்பார். 'தேச பாதுகாப்பு என்ற காரணத்தைக் கூறி, தனிநபர் சுதந்திரம் மீறப்படுவதை மவுனமாக பார்த்துக் கொண்டிருக்க

முடியாது' என, உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்பில் கூறியுள்ளது.

மேற்காசிய நாடான இஸ்ரேலைச் சேர்ந்த, என்.எஸ்.ஓ., என்ற நிறுவனம் தயாரிக்கும் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலமாக, உலகெங்கும் பலருடைய மொபைல் போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.இந்தியாவில் 300 க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள், பத்திரிகையாளர், சமூக ஆர்வலர்களின் மொபைல் போன்களும் ஒட்டு கேட்கப்பட்டதாக தெரிய வந்தது.


உண்மையா, இல்லையாபோன் ஒட்டு கேட்கப் பட்ட விவகாரம் தொடர்பாக நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணை நடத்தக் கோரி, 'எடிட்டர்ஸ் கில்ட்' எனப்படும் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.'நாட்டின் பாதுகாப்பு தொடர்பானது என்பதால், இந்த விவகாரத்தில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய இயலாது' என,மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த், ஹிமா கோஹ்லி அமர்வு, தன் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல், கடந்த செப்., 13ல் ஒத்தி வைத்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற அமர்வு நேற்று அளித்த தீர்ப்பில் கூறப்பட்டுஉள்ளதாவது:நாட்டின் பாதுகாப்பு மிக முக்கியம் என்பதை இந்த நீதிமன்றம் உணர்ந்துள்ளது.அதே நேரத்தில், தேச பாதுகாப்பு என்ற ஒரு காரணத்தைக் கூறி அரசு தப்பிக்க முயற்சிக்கக் கூடாது. ஒட்டு கேட்டது உண்மையா, இல்லையா என்ற கேள்விக்கு, மத்திய அரசு தெளிவான பதில் தரவில்லை.


ஒத்துழைப்பு தேவைஜனநாயக நாட்டில் மக்களின் தனிமனித சுதந்திரத்துக்கு ஆபத்து ஏற்படும்போது, அதை நீதிமன்றம் மவுனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.
சட்டத்தின் ஆட்சி நடக்கும் ஜனநாயக நாட்டில், தன் விருப்பம்போல் தனி மனிதர்களின் போன்கள் ஒட்டு கேட்கப்படுவதை ஏற்க முடியாது.சட்டத்துக்கு உட்பட்டு, உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் இந்த நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.இந்த விவகாரம் தொடர்பாக தாங்களே ஒரு நிபுணர் குழுவை அமைப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.
எவர் மீது புகார் கூறப்படுகிறதோ அவரே, அதை விசாரிப்பது என்பது ஏற்புடையதாகஇருக்காது. இதை பல தீர்ப்புகளில் நீதிமன்றங்கள் தெளிவாக தெரிவித்துள்ளன.அரசே குழுவை அமைத்து விசாரித்தால், அது பாரபட்சமாக இருக்கலாம் என மக்கள் நினைக்க நேரிடும். அதனால், நாங்களே ஒரு குழுவை அமைக்கிறோம். முன்னாள் நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் இந்த குழுவின் விசாரணையை கவனிப்பார்.அரசியல் சாயம் விழுந்துவிடக் கூடாது; எந்த விமர்சனமும் எழுந்துவிடக் கூடாது; அரசு அமைப்புகளின் ஒத்துழைப்பு தேவை என பல அம்சங்களை கருத்தில் கொண்டு, இந்த நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.


அறிக்கை தாக்கல்சைபர் பாதுகாப்பு, 'டிஜிட்டல்' தடயவியல், கம்ப்யூட்டர் நிபுணர் என தேடித் தேடி இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.குஜராத் காந்தி நகரில் உள்ள தேசிய தடயவியல் அறிவியல் பல்கலையின், 'டீன்' நவீன்குமார் சவுத்ரி, கேரளாவில் உள்ள அமிர்தா விஷ்வ வித்யாபீட பேராசிரியர் பி.பிரபாகரன், மும்பை ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப மைய பேராசிரியர் அஸ்வின் அனில் குமாஸ்தே ஆகிய நிபுணர்கள் இந்தக் குழுவில் இடம் பெறுகின்றனர்.
முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி அலோக் ஜோஷி, சைபர் பாதுகாப்பு நிபுணர் சந்தீப் ஓபராய் ஆகியோர் நீதிபதி ரவீந்திரனுக்கு உதவி செய்வர். இந்தக் குழு மிக விரைவாக விசாரணை நடத்தி, தன் அறிக்கையை தாக்கல் செய்யும்.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.வழக்கின் விசாரணை, எட்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


அழிவை ஏற்படுத்தக் கூடாது!உச்ச நீதிமன்ற அமர்வு தன் தீர்ப்பில், பிரபல ஆங்கில எழுத்தாளர் ஜார்ஜ் ஓர்வலின் கோட்பாடான, 'ஓர்விலியன் கன்சர்ன்' என்றவார்த்தையை பயன்படுத்தியுள்ளது.இந்த வார்த்தைக்கு, திறந்த, வெளிப்படையான சமூகத்துக்கு அழிவைஏற்படுத்துவது என்று அர்த்தம்.தீர்ப்பில் அமர்வு கூறியுள்ளதாவது:நீங்கள் ஒரு ரகசியத்தை பாதுகாக்க நினைத்தால், முதலில் உங்களிடம் இருந்து அதை மறைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுவர்.தற்போதுள்ள நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால், பல நன்மைகள் கிடைத்து வருகின்றன. அதே நேரத்தில், அது அழிவை ஏற்படுத்துவதாக இருந்துவிடக் கூடாது.
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.


காங்கிரஸ் வரவேற்புஉச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளதாவது:பொதுவுடைமை கொள்கையை எதிர்க்கும் பாசிசவாதிகளின் கடைசி புகலிடம் தான், போலி தேசியவாதம். அதை தகர்க்கும் வகையில் இந்த உத்தரவு அமைந்துள்ளது.
உண்மைகளை மறைக்க, தவிர்க்க, திசை திருப்ப, நாட்டின் பாதுகாப்பு என்ற ஆயுதத்தை பிரதமர் நரேந்திர மோடி அரசு கையாண்டது.அதிகார துஷ்பிரயோகம் செய்து, சொந்த நாட்டு மக்களின் மொபைல் போன்களை ஒட்டு கேட்டு வந்துள்ளது. சத்தியம் வென்றுஉள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (16+ 28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.n. Dhasarathan - chennai,இந்தியா
30-அக்-202112:27:05 IST Report Abuse
K.n. Dhasarathan பிரதமரும் உள்துறை அமைச்சரும் ஏன் வாயை திறக்கவில்லை ? உண்மையை சொல்லுங்கள், நேர்மையாக செயல்படுங்கள் , நீதிமன்றமும் உங்கள் பக்கம் நிற்கும். வாயை திறக்கவில்லை என்றால் டவுட்டுதான் .
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
28-அக்-202123:52:44 IST Report Abuse
s t rajan Some how 60 years long congress rule has spoiled the three pillars of democracy with lots of their parasites every where.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
28-அக்-202121:40:37 IST Report Abuse
sankaseshan In the past supreme court acted as subordinates of ruling congress and UPA. Now they rise questions on filmsy grounds .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X