28_DMR_16

Added : அக் 27, 2021
Share
Advertisement
பெங்களூரு:வங்கி வேலை வாங்கி தருவதாக இளம்பெண்ணிடம் பணம் பெற்றதோடு, பலாத்காரம் செய்து தலைமறைவாக இருந்த நடிகரை போலீசார் கைது செய்தனர்.கன்னட சினிமாவின் பிரபல வில்லன் நடிகராக இருப்பவர் சேஷகிரி பசவராஜ், 45. இவர், வங்கி வேலை வாங்கி தருவதாக இளம்பெண் ஒருவரிடம் பணம் வாங்கி கொண்டதோடு, பலாத்காரமும் செய்து ஏமாற்றி உள்ளார்.பணத்தை திருப்பி கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக

பெங்களூரு:வங்கி வேலை வாங்கி தருவதாக இளம்பெண்ணிடம் பணம் பெற்றதோடு, பலாத்காரம் செய்து தலைமறைவாக இருந்த நடிகரை போலீசார் கைது செய்தனர்.

கன்னட சினிமாவின் பிரபல வில்லன் நடிகராக இருப்பவர் சேஷகிரி பசவராஜ், 45. இவர், வங்கி வேலை வாங்கி தருவதாக இளம்பெண் ஒருவரிடம் பணம் வாங்கி கொண்டதோடு, பலாத்காரமும் செய்து ஏமாற்றி உள்ளார்.பணத்தை திருப்பி கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்திருந்தார்.

வழக்கு பதிவு செய்திருந்த போலீசார், மைசூரில் தலைமறைவாக இருந்த சேஷகிரி பசவராஜை கைது செய்தனர்.இவர் நடிக்க வருவதற்கு முன் வங்கி ஊழியராக பணியாற்றி வந்தார். சினிமாவில் நடிப்பதற்காக வங்கி வேலையை ராஜினாமா செய்துள்ளார். டார்க், சஸ்பென்ஸ், கிலாடிகளு, ஆசிக் போன்ற பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X