தமிழ்நாடு

5,997 பேருக்கு ரூ.315 கோடி வங்கி கடனுதவி!

Updated : அக் 28, 2021 | Added : அக் 27, 2021
Share
Advertisement
திருப்பூர்: திருப்பூரில் நேற்று நடந்த முகாமில், 5,997 பேருக்கு, 315 கோடி ரூபாய் வங்கி கடன் வழங்கப்பட்டது.திருப்பூர் மாவட்ட அளவிலான வங்கியாளர் குழுமம் சார்பில், மெகா வாடிக்கையாளர் தொடர்பு முகாம், காங்கயம் ரோட்டில் உள்ள காயத்ரி மஹாலில் நேற்று நடந்தது. கலெக்டர் வினீத் தலைமை வகித்தார். கனரா வங்கி பொதுமேலாளர் பூபதி சத்தியநாராயணா வரவேற்றார்.வங்கிகள் கைகொடுக்க
 5,997 பேருக்கு ரூ.315 கோடி வங்கி கடனுதவி!

திருப்பூர்: திருப்பூரில் நேற்று நடந்த முகாமில், 5,997 பேருக்கு, 315 கோடி ரூபாய் வங்கி கடன் வழங்கப்பட்டது.திருப்பூர் மாவட்ட அளவிலான வங்கியாளர் குழுமம் சார்பில், மெகா வாடிக்கையாளர் தொடர்பு முகாம், காங்கயம் ரோட்டில் உள்ள காயத்ரி மஹாலில் நேற்று நடந்தது. கலெக்டர் வினீத் தலைமை வகித்தார். கனரா வங்கி பொதுமேலாளர் பூபதி சத்தியநாராயணா வரவேற்றார்.
வங்கிகள் கைகொடுக்க வேண்டும்கண்காட்சி அரங்கை திறந்து வைத்து, அமைச்சர் சாமிநாதன் பேசுகையில்,''கொரோனா பாதிப்புகளிலிருந்து தமிழக தொழில் துறை மீண்டுவருகிறது. தொழில்முனைவோரின் முயற்சிகளால், திருப்பூர் முன்னிலை வகிக்கிறது. தொழில் வளர்ச்சிக்கு வங்கிகள் தொடர்ந்து கைகொடுக்க வேண்டும்.. கிராமங்கள்தான் நாட்டின் முதுகெலும்பு. அந்த முதுகெலும்பு சரியாக இருப்பதற்கு, வங்கிகள் கடனுதவி வழங்க வேண்டும்'' என்றார்.
சிறு நிறுவனங்களுக்கு தாராள கடனுதவிஎம்.பி., சுப்பராயன் பேசுகையில், ''குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களே, நாட்டில், 90 சதவீதம் வேலைவாய்ப்பை வழங்குகின்றன. இத்தகைய தொழில் துறை மீது, அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, வங்கிகள் கருவிகளாக செயல்படுகின்றன. வங்கிகள் அரசு சொத்தாக இருந்தால் மட்டுமே, வளர்ச்சி ஏற்படும், மக்களின் தேவைகள் நிறைவேறும். வங்கிகள், கார்பரேட் நிறுவனங்களிடம் கறாராக கடன்களை வசூலிக்க வேண்டும்; இதன்மூலம், குறு, சிறு நிறுவனங்களுக்கு தாராளமாக கடன் வழங்கலாம்'' என்றார்.
வங்கிகளாலேயே திருப்பூர் வளர்ச்சிஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக்கழக (ஏ.இ.பி.சி.,) தலைவர் சக்திவேல் பேசுகையில், ''கடந்த 1985ல், ஆண்டுக்கு 15 கோடியாக இருந்த திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தக மதிப்பு, தற்போது, 27 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. வங்கிகள் கைகொடுத்ததாலேயே, திருப்பூர் பின்னலாடை துறை, இத்தகைய வளர்ச்சியை எட்டியுள்ளது. வங்கிகள், மத்திய அரசு திட்டங்கள் மூலம், தொழில்முனைவோருக்கு, தேவையான அளவு கடன் வழங்கவேண்டும்'' என்றார்.
முகாமில், தொழில்முனைவோர் உட்பட 5,997 பேருக்கு, 19 வங்கிகள், மொத்தம், 315.83 கோடி ரூபாய் வங்கி கடன் வழங்கப்பட்டது. எம்.எல்.ஏ., செல்வராஜ், கனரா வங்கி சென்னை மண்டல பொதுமேலாளர் ஸ்ரீகாந்த் மஹபத்ரா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலெக்சாண்டர் உட்பட வங்கியாளர்கள் பங்கேற்றனர்.ஸ்டேட் பாங்க் ஆப் இந்திய துணை பொதுமேலாளர் நாகேஸ்வரராவ் நன்றி கூறினார்.
வங்கிகள், மாவட்ட தொழில்மையம், கால்நடைத்துறை, காதி போர்டு போன்ற அரசு துறை சார்பில், மொத்தம் 38 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை முதல் மாலை வரை நடந்த முகாமில், பின்னலாடை துறையினர், பொதுமக்கள் ஏராளமானோர், வங்கிகளை அணுகி, வீடு, தொழில், விவசாயம், வாகன கடன்கள் பெறுவது குறித்த ஆலோசனை பெற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X