சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

ஆதாரங்கள் வைத்து கொள்வது நல்லது!

Added : அக் 27, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
'ஆன்லைன்' பணப் பரிமாற்றத்தில் சிக்கல்கள் ஏற்பட்டால், அதற்கான வழிகளைக் கூறும் ஆடிட்டர் வி.தியாகராஜன்: ஆன்லைனில் ஒருவருடைய வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்குக்கு பணத்தை மாற்றும் போது, பணத்தைப் பெறுபவருடைய வங்கிக் கணக்கில் உள்ள விபரங்களை இரண்டு முறை சரிபார்த்த பின், பணத்தை 'டிரான்ஸ்பர்' செய்யலாம். அனைத்து விபரங்களும் சரியாக இருந்தும், பணம் வேறு
சொல்கிறார்கள்

'ஆன்லைன்' பணப் பரிமாற்றத்தில் சிக்கல்கள் ஏற்பட்டால், அதற்கான வழிகளைக் கூறும் ஆடிட்டர் வி.தியாகராஜன்: ஆன்லைனில் ஒருவருடைய வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்குக்கு பணத்தை மாற்றும் போது, பணத்தைப் பெறுபவருடைய வங்கிக் கணக்கில் உள்ள விபரங்களை இரண்டு முறை சரிபார்த்த பின், பணத்தை 'டிரான்ஸ்பர்' செய்யலாம். அனைத்து விபரங்களும் சரியாக இருந்தும், பணம் வேறு ஒருவருடைய வங்கிக் கணக்கிற்கு சென்றால், முழுக்க முழுக்க இது வங்கியின் தவறு.அதனால் அதற்கு ஆதாரமாக, பணத்தை டிரான்ஸ்பர் செய்த 'ஸ்க்ரீன் ஷாட்' வைத்துக் கொள்ளவும்.மேலும் ஏற்கனவே உங்கள் கணக்கில் 'ரிஜிஸ்டர்' செய்துள்ள, பணத்தைப் பெறுபவரின் வங்கி விபரம் மற்றும் அந்த தவறு நடந்த குறிப்பிட்ட நாளின் பரிவர்த்தனையுடன், என்ன தவறு நடந்தது என்பதற்கான கடிதம் கொடுத்து, பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.வங்கிக் கணக்கு தொடர்பான, சொல்லப்பட்ட விபரங்களை தவறுதலாக குறிப்பிட்டு பணத்தை டிரான்ஸ்பர் செய்ததும், உங்கள் வங்கிக்கணக்கில் பணம் கழிக்கப்படுகிறது. நீங்கள் தவறாக குறிப்பிட்ட விபரங்கள் இல்லவே இல்லை எனில், உங்கள் வங்கிக் கணக்கிற்கே மூன்று நாட்களுக்குள் தானாகவே 'கிரெடிட்' ஆகி விடும். அப்படி ஆகவில்லை எனில், வங்கிக்கு புகார் அளித்தால், அந்தப் பணத்தை திரும்ப கிரெடிட் செய்து விடுவர்.ஒரே வங்கியில் உள்ள வங்கிக் கணக்கில் தவறுதலாக பணம் மாற்றி அனுப்பப்பட்டால், அதற்கான ஆதாரங்களை வங்கியில் கொடுத்தால், உடனடி நடவடிக்கை எடுத்து, பணத்தை கிரெடிட் செய்வர்.

ஆனால், வேறு வேறு வங்கியில் உள்ள வங்கிக் கணக்கில் தவறுதலாக பணம் டிரான்ஸ்பர் செய்தால், ஆதாரங்களை காட்டி டிரான்ஸ்பர் செய்தவரின் வங்கி யாளர், கிரெடிட் ஆனவரின் வங்கியில் பேசி, நடவடிக்கை எடுக்க சொல்வர்.பெரிய தொகையை டிரான்ஸ்பர் செய்யும் முன், சிறுதொகையை டிரான்ஸ்பர் செய்து சம்பந்தப்பட்டவர்களிடம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். பணம் டிரான்ஸ்பர் செய்த பின், அந்த ஸ்க்ரீன் ஷாட்டையோ அல்லது உங்களுக்கு வந்திருக்கும் குறுஞ்செய்தியையோ சம்பந்தப்பட்டவருக்கு அனுப்பி, உறுதி செய்து கொள்ள வேண்டும்.ஒருவேளை உங்கள் வங்கிக் கணக்கில் தவறுதலாக பணம் கிரெடிட் ஆனால், முதலில் உங்கள் வங்கியில் புகார் தந்து, அதற்கான ஒப்புகை சீட்டை அவசியம் பெற்றுக் கொள்ள வேண்டும். இது, எதிர்காலத்தில் நீங்கள் எந்த விதமான சட்ட சிக்கலிலும் மாட்டிக் கொள்ளாமல் இருக்க உதவியாக இருக்கும்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridharan Venkatraman - Tiruchirappalli,இந்தியா
28-அக்-202112:48:06 IST Report Abuse
Sridharan Venkatraman புதியதாக யாருக்கும் பணம் அனுப்பும் முன்னர் அவரது கணக்கு விபரங்களை சரியாக போட்டு ஐம்பது - நூறு ரூபாய் அனுப்பி பணம் பெற்றதை அவரிடம் உறுதி செய்து கொள்ள வேண்டும். பிறகு ஆயிரமோ லக்ஷமோ அனுப்ப வேண்டும். இதை நான் ஐந்து வருஷமாக செய்கின்றேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X