சீக்ரெட் சிங்காரம்: வாக்காளர் காட்டில் மழை!

Added : அக் 27, 2021
Share
Advertisement
வாக்காளர் காட்டில் மழை!பரிசு மழை பொழிகிறது; ஒவ்வொரு ஓட்டும் நனைகிறது... ஓட்டுக்கு நோட்டு தான் தேர்தலின் வெற்றியை நிர்ணயிக்கிற தராசா மாறியிருக்கு. இதுக்கு தானா, நீதி தேவதை கண்ணை கட்டிக் கொண்டிருக்குறாரோ...ரெண்டு தொகுதிகளில் ஓட்டுக்காக மூக்குத்தி, குக்கர், பித்தளை குடம், வீட்டு உபயோக பொருட்கள் தாராளமாக ஒளிமறைவின்றி வழங்குறாங்க.ஆளும் கட்சிக்கு நிகரா

வாக்காளர் காட்டில் மழை!

பரிசு மழை பொழிகிறது; ஒவ்வொரு ஓட்டும் நனைகிறது... ஓட்டுக்கு நோட்டு தான் தேர்தலின் வெற்றியை நிர்ணயிக்கிற தராசா மாறியிருக்கு. இதுக்கு தானா, நீதி தேவதை கண்ணை கட்டிக் கொண்டிருக்குறாரோ...ரெண்டு தொகுதிகளில் ஓட்டுக்காக மூக்குத்தி, குக்கர், பித்தளை குடம், வீட்டு உபயோக பொருட்கள் தாராளமாக ஒளிமறைவின்றி வழங்குறாங்க.

ஆளும் கட்சிக்கு நிகரா எதிர்க்கட்சிக்காரர்களும் ஓட்டுக்கு பரிசு மழை பொழிவதில் மல்லுக்கட்டுறாங்க. வாக்காளர்கள் காட்டில் செம மழையாம். தேர்தல் களத்தில் ஜனநாயகம் வாழ்வதாக தெரியலையாம்!

தோல்வி பயம் வந்திடுச்சோ?

'ஆளும் கட்சி தோல்வி பயத்தில இருப்பதால், தேர்தல் பிரசாரத்தை சீக்கிரமா முடித்துக்க வேணும்னு திடீர் உத்தரவை எலக் ஷன் கமிஷன் மூலம் அறிவிக்க செய்துட்டாங்க'ன்னு புல்லு கட்டு கட்சியின் 'மாஜி' முதல்வர் கு.அண்ணா தெரிவித்திருக்கிறாரு.வழக்கமா ஓட்டு பதிவுக்கு 78 மணி நேரத்துக்கு முன் பிரசாரத்தை முடிக்க செய்வாங்க. ஆனால் 48 மணி நேரத்துக்கு முன் முடிக்குறாங்க என்றால், ஆளும் தர்பாருக்குள் தோல்வி பீதி படப்படப்பதாக இருக்குது என்பது தான் அர்த்தமாம். இதை, புல்லுக்கட்டு 'மாஜி' கண்டுப்பிடிச்சிட்டாராம்.'இதுக்கு முன் எத்தனையோ தேர்தல் நடந்து முடிந்திருக்கு. இந்த இடைத் தேர்தலில் மட்டும் எதுக்கு வேக வேகமா பிரசாரத்தை முடிக்க செய்யணும். இது, ஜனநாயகத்துக்கு விரோதமானது'ன்னு அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தேர்தலில் 'சூப்பர் மேன்!'

ரெண்டு இடைத்தேர்தலில் காவிக்காரர்களும், புல்லுக்கட்டு காரர்களும் ஓட்டு வேட்டை பிரசாரத்தில், கை கட்சியின் எதிர்க்கட்சித் தலைவரை 'டார்கட்' செய்தாங்களாம்.அதற்கு அவரும், காவிக் காரர்களுக்கு பதிலடி கொடுக்க மறக்கல. மொத்தத்தில தேர்தலின் சித்து விளையாட்டு ஜோரா இருந்ததாம்.இதனாலே இடைத் தேர்தல்களில் அவர் தான் 'சூப்பர்மேனாம்!'

வாரிசுகள் வந்தாச்சு!மாநில முதல்வரின் மகன், கை கட்சியின் எம்.எல்.ஏ.,வான 'மாஜி' முதல்வரின் மகன், புல்லுக்கட்டு கட்சியின் மாஜி முதல்வரின் மகன், என அரசியல் நட்சத்திரங்களின் மகன்கள் எல்லாம் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாங்க.இளைய தலைமுறை எழுந்து விட்டதென காட்டும் தேர்தலாக, ரெண்டு தொகுதிகளின் இடைத்தேர்தல்கள் மூலம் அறிய வெச்சிட்டாங்க.அடுத்து, இந்த தலைமுறை கையில் தான் கர்நாடகம் ஜொலிக்குமென பேச வெச்சிருக்காங்க!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X