அசாம் முதல்வருக்கு எச்சரிக்கை

Added : அக் 27, 2021
Share
Advertisement
அசாம் முதல்வருக்கு எச்சரிக்கைபுதுடில்லி: வடகிழக்கு மாநிலமான அசாமின் மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு, நாளை மறுதினம் இடைத்தேர்தல் நடக்கிறது.இதையொட்டி, மாநில முதல்வர், ஹிமந்தா பிஸ்வ சர்மா பிரசாரம் செய்தார். அப்போது பல்வேறு புதிய வளர்ச்சி திட்டங்களை வெளியிட்டதாக புகார் எழுந்தது.தேர்தல் நடத்தை விதிமுறைகளை முதல்வர் மீறியுள்ளதாக, தேர்தல் ஆணையம் 'நோட்டீஸ்' அனுப்பியது.

அசாம் முதல்வருக்கு எச்சரிக்கை

புதுடில்லி: வடகிழக்கு மாநிலமான அசாமின் மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு, நாளை மறுதினம் இடைத்தேர்தல் நடக்கிறது.இதையொட்டி, மாநில முதல்வர், ஹிமந்தா பிஸ்வ சர்மா பிரசாரம் செய்தார். அப்போது பல்வேறு புதிய வளர்ச்சி திட்டங்களை வெளியிட்டதாக புகார் எழுந்தது.தேர்தல் நடத்தை விதிமுறைகளை முதல்வர் மீறியுள்ளதாக, தேர்தல் ஆணையம் 'நோட்டீஸ்' அனுப்பியது. ஆணையம் முன் ஆஜராகி முதல்வர் பிஸ்வ சர்மா விளக்கம் அளித்தார். இதையடுத்து, தேர்தல் ஆணையம் அவரை எச்சரித்து அனுப்பியது.

'மாஜி' அதிகாரிக்கு கொலை மிரட்டல்

கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் தலைமை செயலராக பதவி வகித்தவர் ஆலாபன் பந்தோபாத்யாய். இவர் தற்போது முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைமை ஆலோசகராக பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி சோனாலி சக்கரவர்த்தி, கோல்கட்டா பல்கலைக்கழக துணை வேந்தராக உள்ளார். இவரது பெயருக்கு சமீபத்தில் கடிதம் ஒன்று வந்தது. அதில், 'உங்கள் கணவர் ஆலாபன் பந்தோபாத்யாய் கொல்லப்படுவார்' என, குறிப்பிடப்பட்டு இருந்தது.கோல்கட்டாவின் ராஜாபஜார் அறிவியல் கல்லுாரியின் வேதியியல் துறையைச் சேர்ந்த கவுர்ஹரி மிஸ்ரா என்பவர் பெயரில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இலவச யாத்திரையில் அயோத்தி

புதுடில்லி: உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள ராம ஜன்ம பூமியில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் வழிபாடு செய்தார். அப்போது, 'டில்லி அரசின் மூத்த குடிமக்களுக்கான முதல்வர் இலவச புனித யாத்திரை திட்டத்தில், அயோத்தி சேர்க்கப்படும்' என, தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் புரி ஜெகன்நாத், ராமேஸ்வரம், ஷீரடி, திருப்பதி உள்ளிட்ட கோவில்களுக்கு இலவச பயணம் மற்றும் தங்கும் வசதிகளை டில்லி அரசு அளித்து வருகிறது. இத்திட்டத்தில், உத்தர பிரதேசத்தின் அயோத்தியையும் இணைக்க, டில்லி அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தொடர் குண்டுவெடிப்பு10 பேர் குற்றவாளிகள்

பாட்னா: கடந்த 2013ல் குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்த போது, பீஹாரின் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது நடந்த தொடர் குண்டு வெடிப்பில் ஆறு பேர் பலியாகினர். இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.இதில் 10 பேரை குற்றவாளி என அறிவித்து என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இவர்களுக்கான தண்டனை அடுத்த மாதம் 1ல் அறிவிக்கப்பட உள்ளது. பக்ருதின் என்பவர் மட்டும் விடுவிக்கப்பட்டார்.

முதல்வர் மீது வழக்கு

நீதிமன்றத்தில் மனுபுதுடில்லி: டில்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் அமித் சாஹ்னி என்பவர் டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதன் விபரம்:பா.ஜ.,வைச் சேர்ந்த ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் வீட்டில், அக்கட்சியின் விவசாய சங்கத்தினர் கூட்டம் கடந்த 3ம் தேதி நடந்தது.அதில், 'ஹரியானாவில் போராடும் விவசாயிகளுக்கு எதிராக பா.ஜ., தொண்டர்கள் அணி திரள வேண்டும். தடியடி, சிறை செல்ல தயங்க கூடாது. இது உங்களை மிகப் பெரிய தலைவர்களாக மாற்றும்' என, முதல்வர் கட்டார் பேசியுள்ளார். அவர் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X