சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்

Updated : அக் 27, 2021 | Added : அக் 27, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஐதராபாத்:ஐதராபாதில் ஒரு பெண்ணுக்கு, ஒரே பிரசவத்தில் ஒரு ஆண், மூன்று பெண் என, நான்கு குழந்தைகள் பிறந்தன.தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது.இம்மாநில தலைநகர் ஐதராபாதில் உள்ள மெகதிபட்டணம் தனியார் மருத்துவமனையில், நேற்று முன்தினம் ஒரு கர்ப்பிணி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஒரு ஆண், மூன்று பெண்
 ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்

ஐதராபாத்:ஐதராபாதில் ஒரு பெண்ணுக்கு, ஒரே பிரசவத்தில் ஒரு ஆண், மூன்று பெண் என, நான்கு குழந்தைகள் பிறந்தன.

தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது.இம்மாநில தலைநகர் ஐதராபாதில் உள்ள மெகதிபட்டணம் தனியார் மருத்துவமனையில், நேற்று முன்தினம் ஒரு கர்ப்பிணி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஒரு ஆண், மூன்று பெண் என நான்கு குழந்தைகள் பிறந்தன. அவர்களின் எடை 1.3 முதல், 1.5 கிலோ வரை உள்ளது.

இது குறித்து டாக்டர்கள் கூறியதாவது:மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒன்பது மாத கர்ப்பிணி உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர். அதற்கான மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்டுள்ளார்.அவசர சிகிச்சை பிரிவில் அறுவை சிகிச்சை நடந்தபோது அவரது ரத்த அழுத்தம் வெகுவாக குறைந்தது;அதிக ரத்தமும் வெளியேறியது.இருப்பினும் தாயும், குழந்தைகளும் நலமாக உள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-அக்-202122:20:06 IST Report Abuse
அப்புசாமி ஏகத்துக்கு கருத்தரிப்பு மாத்திரைகளை முழுங்கியிருப்பாரு... பரவாயில்லை. ரேஷன் அட்டையில் நிறைய சாமான் கிடைக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X