முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு கேரளா வாதத்துக்கு தமிழகம் எதிர்ப்பு

Added : அக் 27, 2021
Share
Advertisement
புதுடில்லி:முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக தேவையில்லாத பிரசாரம் நடந்து வருவதாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டது.கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள முல்லை பெரியாறு அணையை, தமிழக அரசு பராமரித்து வருகிறது. சமீபத்தில் கேரளாவில் தொடர்ந்து கன மழை பெய்தது.இதனால், அணையின் பாதுகாப்புக்காக கூடுதல் தண்ணீர் திறந்து விட கேரளா

புதுடில்லி:முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக தேவையில்லாத பிரசாரம் நடந்து வருவதாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டது.

கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள முல்லை பெரியாறு அணையை, தமிழக அரசு பராமரித்து வருகிறது. சமீபத்தில் கேரளாவில் தொடர்ந்து கன மழை பெய்தது.இதனால், அணையின் பாதுகாப்புக்காக கூடுதல் தண்ணீர் திறந்து விட கேரளா வலியுறுத்திஉள்ளது.இது தொடர்பாக, நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வில் விசாரணை நடந்து வருகிறது.

விவாதத்தின்போது, 'அணையின் பாதுகாப்பு தொடர்பாக தொடர்ந்து தேவையில்லாத பிரசாரம் நடந்து வருகிறது. இதில், கேரள அரசின் வாதம் ஏற்புடையதல்ல' என, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நபாடே வாதிட்டார்.'அணையின் பாதுகாப்பு தொடர்பாக, 2006ல் நிபுணர்கள் குழு ஆய்வு செய்து அறிக்கை அளித்தது. தற்போதும் அணை அதே நிலையில் உள்ளதா' என, அமர்வு கேள்வி எழுப்பியது.

இதற்கு பதிலளித்த, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டி, 'உச்ச நீதிமன்றம் 2014ல் அளித்த உத்தரவில், அணையில் 142 அடி வரை நீரை சேமிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. ஆனால், அதை ஏற்க கேரளா தொடர்ந்து மறுத்து வருகிறது' என்றார்.வழக்கின் விசாரணை இன்றும் தொடர்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X