இந்தியா மீது தடை விதிக்க கூடாது பைடனுக்கு எம்.பி.,க்கள் கடிதம்

Added : அக் 27, 2021
Share
Advertisement
வாஷிங்டன்:'ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணைகள் வாங்குவதால், இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கக் கூடாது' என, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு, இரண்டு முக்கிய எம்.பி.,க்கள் கடிதம் எழுதிஉள்ளனர்.ரஷ்யாவிடம் இருந்து, 'எஸ் - 400' ரக அதிநவீன ஏவுகணைகள் வாங்க, 2018ல் இந்தியா ஒப்பந்தம் செய்தது. தரையில் இருந்து ஆகாயத்தில் உள்ள இலக்கை தாக்கக் கூடிய இந்த ஏவுகணைகள் வாங்க, 39 ஆயிரம் கோடி ரூபாய்

வாஷிங்டன்:'ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணைகள் வாங்குவதால், இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கக் கூடாது' என, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு, இரண்டு முக்கிய எம்.பி.,க்கள் கடிதம் எழுதிஉள்ளனர்.

ரஷ்யாவிடம் இருந்து, 'எஸ் - 400' ரக அதிநவீன ஏவுகணைகள் வாங்க, 2018ல் இந்தியா ஒப்பந்தம் செய்தது. தரையில் இருந்து ஆகாயத்தில் உள்ள இலக்கை தாக்கக் கூடிய இந்த ஏவுகணைகள் வாங்க, 39 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. மேலும், 'காட்சா' என்ற சட்டமும் அமெரிக்காவில் நடைமுறையில் உள்ளது. இந்த சட்டத்தின்படி, அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ள நாடுகளுடன் ராணுவ மற்றும் வர்த்தக ஒப்பந்தம் செய்யும் நாடுகள் மீதும் பொருளாதார தடை விதிக்க முடியும்.

திட்டமிட்டபடி, ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணைகள் வாங்க மத்திய அரசு ஏற்கனவே முடிவு செய்துள்ளது. அதையடுத்து, இந்தியா மீதும் பொருளாதார தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு, ஜனநாயக கட்சியைச் சேர்ந்த மார்க் வார்னர், குடியரசு கட்சியைச் சேர்ந்த ஜான் கார்ன்யின் என்ற எம்.பி.,க்கள் கடிதம் ஒன்றை எழுதி உள்ளனர்.

அதில் அவர்கள் கூறியுள்ளதாவது:இந்தியா நம்முடைய மிகச் சிறந்த நட்பு நாடு. ஏற்கனவே செய்த ஒப்பந்தத்தின்படி, ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணைகள் வாங்க இந்தியா திட்டமிட்டு உள்ளது. நம் நாட்டின் நலனையும், நட்பையும் கருத்தில் கொண்டு, இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கக் கூடாது. காட்சா சட்டத்தின்படி, சில விதிவிலக்கு அளிக்க அதிபருக்கு அதிகாரம் உள்ளது. அதன்படி இந்தியாவுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X