கனடாவின் ராணுவ அமைச்சராக தமிழக பெண் நியமனம்

Added : அக் 27, 2021
Share
Advertisement
டோரோன்டோ:கனடா ராணுவ அமைச்சராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழ் பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.வட அமெரிக்க நாடான கனடாவில் கடந்த மாதம் பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 338 இடங்களில், பிரதமர் ட்ரூடோவின் லிபரல் கட்சி 156 இடங்களையும், கன்சர்வேட்டிவ் கட்சி 121 இடங்களையும்கைப்பற்றின. ஆட்சி அமைக்க 170 இடங்கள் தேவை என்ற நிலையில், சிறு கட்சிகளின் ஆதரவோடு ஜஸ்டின் ட்ரூடோ
 கனடாவின் ராணுவ அமைச்சராக தமிழக பெண் நியமனம்

டோரோன்டோ:கனடா ராணுவ அமைச்சராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழ் பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.

வட அமெரிக்க நாடான கனடாவில் கடந்த மாதம் பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 338 இடங்களில், பிரதமர் ட்ரூடோவின் லிபரல் கட்சி 156 இடங்களையும், கன்சர்வேட்டிவ் கட்சி 121 இடங்களையும்கைப்பற்றின. ஆட்சி அமைக்க 170 இடங்கள் தேவை என்ற நிலையில், சிறு கட்சிகளின் ஆதரவோடு ஜஸ்டின் ட்ரூடோ மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார்.

இந்நிலையில், புதிய அமைச்சரவை பட்டியலை பிரதமர் ட்ரூடோ வெளியிட்டார்.38 அமைச்சர்கள் அடங்கிய பட்டியலில், ராணுவ அமைச்சராக இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த், 54, நியமிக்கப்பட்டுள்ளார். அனிதா ஆனந்தின் தந்தை எஸ்.வி.ஆனந்த், தமிழகத்தைச் சேர்ந்தவர். தாய், பஞ்சாபைச் சேர்ந்தவர்.

லிபரல் கட்சி சார்பில் ஒக்வில்லே தொகுதியில் போட்டியிட்ட அனிதா ஆனந்த், 46 சதவீத ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.அனிதா ராணுவ அமைச்சராவதற்கு முன், பொது சேவைகள் மற்றும் கொள்முதல் துறை அமைச்சராக இருந்தார். கனடாவில், முன்னாள் பிரதமர் கிம் கேம்ப்பெல்லுக்கு பின், ராணுவ அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள இரண்டாவது பெண் அனிதா ஆனந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X