மீண்டும் பழனிசாமி - பன்னீர்செல்வம்...மோதல்!

Updated : அக் 28, 2021 | Added : அக் 27, 2021 | கருத்துகள் (39) | |
Advertisement
சசிகலா விவகாரம் தொடர்பாக, அ.தி.மு.க.,வில் பழனிசாமி - பன்னீர்செல்வம் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. கட்சியில் சசிகலாவை சேர்க்கும் விவகாரத்தில், டிசம்பரில் நடக்கும் பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா, அ.தி.மு.க.,வில் இணைய, பல வழிகளில் முயற்சித்து வருகிறார். ஆனால், அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளரும்,
பழனிசாமி - பன்னீர்செல்வம்.மீண்டும்,மோதல்!

சசிகலா விவகாரம் தொடர்பாக, அ.தி.மு.க.,வில் பழனிசாமி - பன்னீர்செல்வம் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. கட்சியில் சசிகலாவை சேர்க்கும் விவகாரத்தில், டிசம்பரில் நடக்கும் பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா, அ.தி.மு.க.,வில் இணைய, பல வழிகளில் முயற்சித்து வருகிறார். ஆனால், அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி, 'சசிகலாவுக்கும், அ.தி.மு.க.,வுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது' என, திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


அதற்கு நேர்மாறாக, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்திருக்கிறார். இரு தினங்களுக்கு முன், மதுரையில் பன்னீர்செல்வத்திடம், சசிகலா மீண்டும் அ.தி.மு.க.,வில் சேர்க்கப்படுவாரா என கேட்கப்பட்டதற்கு, 'தலைமை நிர்வாகிகள் கூடி முடிவு எடுப்பர்' என்றார்.இது, கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது. சசிகலா விவகாரத்தில், பன்னீர்செல்வமும், பழனி சாமியும் வெவ்வேறு கருத்துகளை தெரிவித்தது, இருவருக்கும் இடையிலான மோதலை அம்பலப்படுத்தியது.

அதன் தொடர்ச்சியாக, முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், முனுசாமி ஆகியோர், பன்னீர்செல்வம் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு, 'பன்னீர்செல்வம் கூறியதில், எந்த தவறும் இல்லை' என, ஆதரவுக் கொடி பிடித்தார். அதேபோல், கட்சி அமைப்பு செயலரும், வழிகாட்டி குழு உறுப்பினருமான ஜெ.சி.டி.பிரபாகரும் ஆதரவு கருத்து கூறியிருக்கிறார்.


சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி:ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், 'சசிகலாவை சேர்ப்பதும், சேர்க்காமல் இருப்பதும், என் தனிப்பட்ட முடிவு அல்ல; கட்சியின் நிர்வாக பொறுப்பில் இருப்போர் ஒன்று கூடி முடிவு செய்வர்' எனக் கூறியதில் தவறில்லை. அவரை சேர்க்க வேண்டும் என்று அவர் கூறவில்லை.தலைவர்கள் தடுமாறலாம்; தொண்டர்கள் நிலையாக உள்ளனர். அ.தி.மு.க., காப்பாற்றப்பட வேண்டும் என்பதில், உறுதியாக உள்ளனர். கட்சி காப்பாற்றப்பட, தலைவர்கள் ஒருவரை ஒருவர் மறைமுகமாக, மற்றவர்களை வைத்து பேசுவதை தவிர்க்க வேண்டும். கட்சியை உருக்குலையாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு, ஒவ்வொருவருக்கும் உள்ளது.பன்னீர்செல்வம் பேட்டியில், எந்த தவறும் இல்லை. அதில் தவறு இருப்பதாக நினைத்து, மற்றவர்கள் பேட்டி அளித்திருப்பது வேதனை அளிக்கிறது.

கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும். யாரும் பாதிக்கப்படக் கூடாது. தொண்டர்கள் எண்ணம் மதிக்கப்பட வேண்டும் என்பது தான், பன்னீர்செல்வம் விருப்பம். பன்னீர்செல்வம் - பழனிசாமி இடையே, கருத்து வேறுபாடு இருப்பதாக, நான் நினைக்கவில்லை. ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்தில், கட்சி செல்லக் கூடாது என்பதை, பன்னீர்செல்வம் ஏற்கனவே பல முறை கூறியுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.சசிகலா விவகாரம் தொடர்பாக, இப்படி இரு பிரிவாக மோதிக் கொள்வது, தொண்டர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதனால், இவ்விவகாரத்தில் இறுதி முடிவு எடுப்பதற்காக, கட்சி பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று, ஒரு தரப்பினர் வலியுறுத்துகின்றனர்.


அதனால் டிசம்பரில் பொதுக்குழு கூட்டப்படலாம் என்றும், அதில் சசிகலாவை சேர்ப்பதற்கு எந்தளவுக்கு ஆதரவு கிடைக்கிறது என்பதை பார்த்து, அதனடிப்படையில் முடிவு எடுக்கப்படலாம் என்றும், அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.


அண்ணனுக்காக தம்பி துாது?தஞ்சாவூரில் நடந்த அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் மகள் திருமண வரவேற்பு விழாவில், பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா பங்கேற்றார். சசிகலா பங்கேற்ற நிகழ்ச்சியில் இவரும் பங்கேற்றது, சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மணமக்களை வாழ்த்திய பின், தினகரனிடம் அவர் சிறிது நேரம் பேசினார். அண்ணனுக்காக தம்பி ராஜா, தினகரனிடம் துாது போய் இருப்பாரோ என்ற சந்தேகம் அ.தி.மு.க.,வினரிடம் எழுந்துள்ளது.


'பன்னீர் நியாயவாதி!'''சசிகலாவை அ.தி.மு.க.,வில் சேர்ப்பது குறித்து, பன்னீர்செல்வம் கூறியிருப்பது சரியானது தான். அவர் எப்போதும் நியாயமாகத் தான் பேசுவார்,'' என, அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் கூறினார். மருது சகோதரர்கள் குருபூஜை விழாவை ஒட்டி, தஞ்சாவூரில் நேற்று அவர்களது படத்துக்கு மாலை அணிவித்த தினகரன் கூறியதாவது: மருது சகோதரர்கள் வீரத்திலும், விசுவாசத்திலும் சிறந்தவர்கள். நல்ல மனிதர்களுடன் இணைந்து தமிழகத்தில், ஜெயலலிதா ஆட்சியைக் கொண்டு வருவதே இலக்கு.'சசிகலாவை அ.தி.மு.க.,வில் சேர்ப்பது குறித்து, கட்சி கூட்டத்தில் முடிவு செய்வோம்' என பன்னீர்செல்வம் கூறிய கருத்து சரியானது. அவர் எப்போதுமே நியாயமாகத் தான் பேசுவார். அவர் மனதில் பட்ட கருத்தை துணிந்து சொல்லியிருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
David DS - kayathar,இந்தியா
28-அக்-202123:16:41 IST Report Abuse
David DS பன்னீரின் ஜாதி பற்று அடங்காது, சுய ரூபத்தை அவ்வப்போது காட்டி கொண்டே இருக்கும்
Rate this:
Cancel
David DS - kayathar,இந்தியா
28-அக்-202123:16:03 IST Report Abuse
David DS panneerin
Rate this:
Cancel
Nagercoil Suresh - India,இந்தியா
28-அக்-202121:38:32 IST Report Abuse
Nagercoil Suresh பன்னீரிடமிருந்து முதல்வர் பதவியை மிரட்டி வாங்கிவிட்டு பன்னீரின் வீட்டில் கூடியவர்களை குண்டர்களை விட்டு கல்லெறிந்ததும் நாற்காலிகளை அடித்து நொறுக்கினதும் பன்னீர் மறந்துவிட்டார் போல தெரிகிறது, தற்போதய சூழலில் பன்னீர் தவறான முடிவை எடுத்தால் பழனியின் கை தான் ஓங்கும் பன்னீர் திரும்பவும் ஓரம்கட்டப்படுவார்..சிலந்தியின் பிடியில் பன்னீர் மாட்ட மாட்டார் என நம்புவோம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X