பொது செய்தி

இந்தியா

'விரைவில் ஜம்மு - காஷ்மீர் முழுதும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் வரும்'

Added : அக் 27, 2021
Share
Advertisement
ஸ்ரீநகர்:''ஜம்மு - காஷ்மீர் முழுதும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் வரும்,'' என, விமானப் படையின் மேற்கு கமாண்ட் பிரிவின் தலைவர் ஏர் மார்ஷல் அமித் தேவ் நம்பிக்கை தெரிவித்தார்.நாடு சுதந்திரம் பெற்ற பின், ௧௯௪௭ அக்டோபர் ௨௬ல், ஜம்மு - காஷ்மீரை இந்தியாவுடன் சேர்ப்பதற்கான ஒப்பந்தத்தில், காஷ்மீர் மன்னர் ஹரிசிங் கையெழுத்திட்டார். அதற்கு மறுநாளான அக்., ௨௭ல், காஷ்மீர் பட்காம்

ஸ்ரீநகர்:''ஜம்மு - காஷ்மீர் முழுதும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் வரும்,'' என, விமானப் படையின் மேற்கு கமாண்ட் பிரிவின் தலைவர் ஏர் மார்ஷல் அமித் தேவ் நம்பிக்கை தெரிவித்தார்.

நாடு சுதந்திரம் பெற்ற பின், ௧௯௪௭ அக்டோபர் ௨௬ல், ஜம்மு - காஷ்மீரை இந்தியாவுடன் சேர்ப்பதற்கான ஒப்பந்தத்தில், காஷ்மீர் மன்னர் ஹரிசிங் கையெழுத்திட்டார். அதற்கு மறுநாளான அக்., ௨௭ல், காஷ்மீர் பட்காம் பகுதியில் இந்திய விமானப் படை தரையிறங்கியது. அங்கு அத்துமீறி புகுந்திருந்த பாகிஸ்தானியர்களை விரட்டியடித்தது.பட்காமில் நம் விமானப் படை தரையிறங்கியதன் ௭௫ம் ஆண்டு துவக்க விழா கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேச தலைநகர் ஸ்ரீநகரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, விமானப் படை மேற்கு கமாண்ட் பிரிவின் தலைவர் ஏர் மார்ஷல் அமித் தேவ், நிருபர்களிடம் கூறியதாவது:நம் விமானப் படையும், ராணுவமும் இணைந்து, 1947 அக்., 27ல் மேற்கொண்ட நடவடிக்கைகளால், இப்போதுள்ள ஜம்மு - காஷ்மீர் பகுதி நமக்கு சொந்தமானது.

அதே நேரத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வசிக்கும் மக்களை அந்நாடு சரியாக நடத்துவதில்லை. அதனால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உட்பட, ஜம்மு - காஷ்மீர் முழுதும் விரைவில் இந்தியாவின் கட்டுப்பாட்டில் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. எனினும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க, இப்போது எந்த திட்டமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X