ஆர்யன் கான் ஜாமின் மனு: இன்றும் தொடரும் விசாரணை

Added : அக் 27, 2021
Share
Advertisement
புதுடில்லி:'பாலிவுட்' நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானின் ஜாமின் மனு மீதான விசாரணை, மும்பை உயர் நீதிமன்றத்தில் இன்றும் தொடர்கிறது.மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த, 'பாலிவுட்' நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான், போதை பொருள் தடுப்பு படையினரால் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். கடந்த 20 நாட்களாக மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இவர் தாக்கல்

புதுடில்லி:'பாலிவுட்' நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானின் ஜாமின் மனு மீதான விசாரணை, மும்பை உயர் நீதிமன்றத்தில் இன்றும் தொடர்கிறது.

மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த, 'பாலிவுட்' நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான், போதை பொருள் தடுப்பு படையினரால் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். கடந்த 20 நாட்களாக மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இவர் தாக்கல் செய்த ஜாமின் மனுவை, மும்பையில் உள்ள போதை பொருள் தடுப்பு நீதிமன்றம் இரண்டு முறை தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. ஆர்யன் கான் தரப்பில் முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி ஆஜரானார். மனு மீதான விசாரணை நேற்றும் தொடர்ந்தது.முகுல் ரோஹத்கி வாதிட்டதாவது: ஆர்யன் கான் போதை பொருள் பயன்படுத்தவில்லை. அவரிடம் இருந்து போதை பொருட்கள் கைப்பற்றப்படவில்லை.

'வாட்ஸ் ஆப்' தகவல் பரிமாற்றத்தின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கைதுக்கு சரியான காரணம் கூறப்படவில்லை.எனவே, அவர் கைது செய்யப் பட்டதற்கும், ஜாமின் மறுக்கப்படுவதற்குமான காரணங்கள் மிக அற்பமானவையாக உள்ளன.கைது செய்யப்பட்ட எந்த நபரையும் கைதுக்கான காரணத்தை தெரிவிக்காமல் காவலில் வைக்க முடியாது.அத்தகைய நபர் தன் விருப்பப்படி ஒரு வழக்கறிஞரை கலந்து ஆலோசிக்க உரிமை உண்டு.

போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட இதர நபர்கள் கைது செய்யப்படாததால், இந்த விவகாரத்தில் அரசியலமைப்பு சிக்கல்கள் எழ வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் வாதிட்டார். இந்நிலையில் வழக்கு விசாரணை இன்றும் தொடர்ந்து நடைபெற உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X