பொது செய்தி

தமிழ்நாடு

1 டி.எம்.சி., பாலாற்று நீர் கடலில் கலந்து வீணானது

Added : அக் 27, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம்:பாலாற்றின் வாயலுாரில் இருந்து, ஒரு நாளைக்கு 220 மில்லியன் கன அடி நீர் என, நான்கு நாட்களுக்கு ஒருமுறை 1 டி.எம்.சி., தண்ணீர் கடலில் கலந்து வீணாகிறது.வட மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக, பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் அணையில் இருந்து வரும் தண்ணீர், காஞ்சிபுரம் பாலாற்றில் கூடுதலாக வருவதால், ஏரிகளை
 1 டி.எம்.சி., பாலாற்று நீர் கடலில் கலந்து வீணானது

காஞ்சிபுரம்:பாலாற்றின் வாயலுாரில் இருந்து, ஒரு நாளைக்கு 220 மில்லியன் கன அடி நீர் என, நான்கு நாட்களுக்கு ஒருமுறை 1 டி.எம்.சி., தண்ணீர் கடலில் கலந்து வீணாகிறது.

வட மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக, பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் அணையில் இருந்து வரும் தண்ணீர், காஞ்சிபுரம் பாலாற்றில் கூடுதலாக வருவதால், ஏரிகளை நிரப்பும் பணி நடக்கிறது. அதில் குறிப்பிடும்படியாக, துாசி மாமண்டூர் ஏரி, தாமல் ஏரி, கோவிந்தவாடி ஏரி, கம்ப கால்வாய் வழியாக பல ஏரிகள் நிரப்பப்படுகின்றன.

இந்த கால்வாய்களுக்கு போதிய அளவு தண்ணீர் சென்ற பின்பும், பாலாற்றில் வெள்ளம் போல் தண்ணீர் ஓடுகிறது.இதனால், பாலாற்றின் பழையசீவரம் அருகில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஈசூர் - வல்லிபுரம் தடுப்பணை மற்றும் கல்பாக்கம் அருகில் உள்ள வாயலுார் தடுப்பணை ஆகியவற்றில் தண்ணீர் நிரம்பி வழிகிறது.

தடுப்பணைகள் முழுதுமாக நிரம்பியதால், 5 கி.மீ., வரைக்கும் பாலாற்றில் தண்ணீர் தேங்கி நிற்பதை, விவசாயிகள் மகிழ்ச்சியோடு பார்க்கின்றனர்.அதே சமயம், வாயலுார் தடுப்பணையில் இருந்து வெளியேறும் வெள்ள நீர், வினாடிக்கு 2,600 கன அடி பாலாற்றில் இருந்து கடலில்கலக்கிறது.

வினாடிக்கு 2,600 கன அடி நீர் என்றால், ஒரு நாளைக்கு 220 மில்லியன் கன அடி நீர் கடலில் கலக்கிறது. நான்கு நாட்களுக்கு 1 டி.எம்.சி., தண்ணீர் கடலில் கலக்கும். நான்கு நாட்களுக்கு கடலில் கலக்கும் தண்ணீரைக் கொண்டு, தென்னேரி போன்ற பெரிய ஏரியை நிரப்ப முடியும். காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் மூன்று தடுப்பணைகள் மட்டுமே உள்ளன. மேலும் நான்கு தடுப்பணைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளன. நிதி ஒதுக்கீடு இல்லாததால், அடுத்தக்கட்ட பணிகள் நடைபெறாமல் முடங்கியுள்ளன. இவை அமைந்தால், வீணாகும் நீர் சேமிக்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X