அரசியல் செய்தி

தமிழ்நாடு

'இதற்கெல்லாம் பயப்படுவேனா?' சீறுகிறார் அண்ணாமலை

Added : அக் 27, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
''வழக்கு போடுவதாக கூறி, தி.மு.க., என்னை ஒரு நாளும் மிரட்ட வேண்டாம். மிரட்டலுக்கு பணிவேன் என்றும் நினைக்க வேண்டாம்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.அண்ணாமலை பேட்டி:'யோக்கியமான ஆட்சியை தருவோம்' எனக் கூறி, மக்களை ஏமாற்றி ஆட்சி பொறுப்புக்கு வந்த தி.மு.க., தொடர்ந்து ஊழல் செய்வதில் குறியாக இருக்கிறது. தி.மு.க., அரசை, 'கரப்ஷன்; கலெக் ஷன்; கட்மணி' என்று தான் சொல்ல
 'இதற்கெல்லாம் பயப்படுவேனா?' சீறுகிறார் அண்ணாமலை

''வழக்கு போடுவதாக கூறி, தி.மு.க., என்னை ஒரு நாளும் மிரட்ட வேண்டாம். மிரட்டலுக்கு பணிவேன் என்றும் நினைக்க வேண்டாம்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
அண்ணாமலை பேட்டி:'யோக்கியமான ஆட்சியை தருவோம்' எனக் கூறி, மக்களை ஏமாற்றி ஆட்சி பொறுப்புக்கு வந்த தி.மு.க., தொடர்ந்து ஊழல் செய்வதில் குறியாக இருக்கிறது. தி.மு.க., அரசை, 'கரப்ஷன்; கலெக் ஷன்; கட்மணி' என்று தான் சொல்ல வேண்டும். அந்தளவுக்கு ஒவ்வொரு துறையிலும் ஊழல் நடக்கிறது.உண்மையான எதிர்க்கட்சியாக செயல்பட்டு, ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் பணியை, பா.ஜ., செய்து வருகிறது. அந்த வகையில் தான், மின் துறை ஊழல்கள் குறித்து கூறினேன்.

மின்சாரம் சப்ளை செய்யும் தனியார் நிறுவனங்களுக்கு, அதற்கான பணம் கொடுக்கும் போது, கமிஷன் பெறப்படுகிறது என கூறினேன். அதற்கான ஆவணங்களை கேட்டனர்; பணம் கொடுத்ததற்கான ஆவணங்களையும் வெளியிட்டு விட்டேன். உடனே, 'இதுதான் ஆதாரமா?' என்று கேட்கின்றனர். செய்யும் தவறை திருத்திக் கொள்ளாமல், விமர்சனத்துக்கு பதில் விமர்சனமாக கேள்வி கேட்டு பிரச்னையை மூடி மறைக்க பார்க்கின்றனர்.அதே மாதிரி தான், 'போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு தீபாவளிக்காக கொடுக்கப்படும், 'ஸ்வீட் பாக்ஸ்' பரிசை, கமிஷன் தொகை பேசி, அதிக விலை கொடுத்து தனியாரிடம் வாங்கப் பார்க்கின்றனர்' எனக் குறிப்பிட்டேன்.

தவறு என்றதும் பிரச்னையாகி விட்டது. உடனே, அரசு நிறுவனமான ஆவினில் வாங்க முடிவெடுத்து அறிவித்து விட்டனர். இந்த விவகாரத்தில், முதல்வரே தலையிட்டு உத்தரவிட்டு உள்ளார். அப்படியென்றால், முறைகேடு செய்ய தயாராக இருந்தனர் என்பது தானே பொருள்? தவறு நடக்க தடை போட்டு விட்டார் முதல்வர் என்றதும் பாராட்டினேன். தவறு செய்யாமல், ஆட்சி செய்யட்டும்; அவர்களை பாராட்ட தயாராகத் தான் இருக்கிறோம்.

செய்வது அத்தனையும் தவறு; முறைகேடு. சொன்னால் மட்டும் கோபம் வருகிறது. தனியார் நிறுவனத்தில் குறைந்த அளவில் முதலீடு செய்து விட்டு, அந்நிறுவனத்தில் இருந்து மின்சாரம் வாங்க, அதிக விலைக்கு ஒப்பந்தம் போட்டு பல நுாறு கோடிகளை சம்பாதிக்க திட்டமிட்டனர். இதற்கான முன்னேற்பாடுகளை செய்தனர். அது தொடர்பான செய்தி வந்ததும், தி.மு.க., அரசின் மின் கொள்முதல் முறைகேடு என சொன்னேன்.

இப்படித் தான், மின் துறை, போக்குவரத்துத் துறை மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் ஏகபோகமாக ஊழல் நடக்கிறது. எல்லா விபரங்களையும் திரட்டி வைத்திருக்கிறேன். ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு கொண்டு வரப் போகிறேன். உண்மையைச் சொன்னால், உடனே 'மானநஷ்ட வழக்கு போடுவேன்; 500 கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும்' என, வழக்கறிஞர் 'நோட்டீஸ்' கொடுக்கின்றனர். அதற்கெல்லாம் இந்த அண்ணாமலை பயப்படுவேனா?

நீதிமன்றங்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் என் மீது வழக்குப் போடட்டும். என்னவெல்லாம் சொல்கிறேனோ, அத்தனைக்குமான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறேன். இப்படி மிரட்டுவதால், பயந்து ஓடுவதற்கும், ஒதுங்குவதற்கும் அண்ணாமலை, தி.மு.க., தலைவர்கள் வீட்டு வேலை ஆள் அல்ல.

மத்தியிலும், 17 மாநிலங்களிலும் ஆட்சி பொறுப்பில் இருக்கும் மாபெரும் இயக்கத்தின், மாநில தலைவன். தி.மு.க., ஊழலை அவ்வப்போது வெளிச்சத்துக்கு கொண்டு வந்து, ஊழல் இல்லா தமிழகத்தை உருவாக்கவே பாடுபடுகிறேன். இதுவும் பிரதான மக்கள் பணி தான். வழக்கு போடுவதாக கூறி, தி.மு.க., என்னை ஒரு நாளும் மிரட்ட வேண்டாம். பணிவேன் என்றும் நினைக்க வேண்டாம். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
28-அக்-202118:37:25 IST Report Abuse
மலரின் மகள் அண்ணாமலை தமிழக அரசியலில் தனக்கென ஒரு புதிய முத்திரையையும் சகாப்தத்தையும் ஏற்படுத்தி வருகிறார் போல. உண்மையிலேயே இவரை கண்டு அரசியல் காட்சிகள் அஞ்சுகின்றன. வெளுத்து வாங்குகிறார். ஆக்சன் எடுக்கமுடியாது என்று நன்கு அறிந்திருக்கிறார். மோடியின் பெயரை சொல்லி ஒரே போடு போட்டு அடக்கிவிடுகிறார். பின்னணியில் மிகவும் சக்திவாய்ந்த இயக்கம் இருக்கிறது என்றும், தமிழகத்தில் தேசப்பற்று எல்லை விவகாரம் இராணுவ வலிமை பற்றியெல்லாம் பேசி ஓட்டுக்கள் வாங்க முடியாது. என்றும் அதற்கு ஒரே வழி, ஊழலை காலிசெய்வதே என்று இப்போது தான் சரியான நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார்கள் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பிஜேபி க்கும் ஊழலுக்கும் தான் மிகப்பெரிய போட்டி இருக்கும் என்று தெரிகிறது. ஊழலை செய்வதற்கு மிகவும் பிரயத்தனம் படவேண்டும். புதிய யுக்திகளை மேம்படுத்தப்பட்ட உயரிய அறிவியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தான் செய்யமுடியும் போல. நடுவில் இந்த பேகசஸ் மென்பொருள் வேறு காட்டி கொடுத்துவிடுகிறது. பேசுவதே கூட யாரும் இல்லாமல் தனியாகத்தான் பேசவேண்டும்போல. அப்படி இருக்க எப்படி திட்டமிட்டு தப்பிக்கும் வகையில் ஊழல் செய்வது என்று அறிவது மிக கடினம் போல. ஊழல் குறைந்தொழிந்தால் சரியே. எதிர்க்கட்சியாக பிஜேபி தன்னை அறிவித்து கொண்டு செயலாற்றுகிறது, ஆளும்கட்சி அதற்கு தகுந்தவாறே நடந்து கொள்கிறது. இந்துக்கள் ஓட்டுக்களை ஊழலுக்கு எதிரான கட்சி என்ற வகையிலும், கோவில்களுக்கு சிறப்பு, கோவில்களில் சிறந்த வசதிகள் பக்தி மார்க்கம் உயர்வாக என்று செய்ய ஆரம்பித்து அதன் மூலம் ஆன்மீக வழியிலும் ஊழலற்ற வகையும் பிஜேபி தன்னை தமிழகத்தில் நிலை நிறுத்தி கொள்ளமுடியும்.
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
28-அக்-202115:49:39 IST Report Abuse
sankar இப்படி தினமும் தன்னைக் காட்டிக் கொண்டு, நா வறண்டு வெகுவிரைவில் வறட்டுத் தவளை ஆகிவிடுவார்.
Rate this:
Cancel
Madhumohan - chennai,இந்தியா
28-அக்-202113:06:05 IST Report Abuse
Madhumohan தேர்தல் தில்லுமுல்லை மட்டும் விட்டு விட்டால் பிஜேபியும் நல்ல கட்சிதான் ..........
Rate this:
Surendran - singapore,சிங்கப்பூர்
28-அக்-202113:35:13 IST Report Abuse
Surendranபெட்ரோல்,டீசல்,சமையல் வாயு விலை ஏற்றம் குளு குளுன்னு இருக்கோ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X