அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்டு அண்ணாமலைக்கு 'நோட்டீஸ்'

Added : அக் 27, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மின் வாரியத்தில் முறைகேடு நடப்பதாக குற்றம்சாட்டிய, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையிடம், 500 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு, தனியார் நிறுவனம் 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது. அதற்கு அண்ணாமலை கிண்டலாக பதில் அளித்துள்ளார்.'மின் வாரியத்தில் தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்வதில் ஊழல் நடக்கிறது. கொள்முதல் செய்த மின்சாரத்திற்கு பணம் செலுத்த 4 சதவீதம் கமிஷன்

மின் வாரியத்தில் முறைகேடு நடப்பதாக குற்றம்சாட்டிய, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையிடம், 500 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு, தனியார் நிறுவனம் 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது. அதற்கு அண்ணாமலை கிண்டலாக பதில் அளித்துள்ளார்.

'மின் வாரியத்தில் தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்வதில் ஊழல் நடக்கிறது. கொள்முதல் செய்த மின்சாரத்திற்கு பணம் செலுத்த 4 சதவீதம் கமிஷன் பெறப்படுகிறது' என, அண்ணாமலை குற்றம் சாட்டினார்.'அதற்கான ஆதாரங்களை வெளியிடுவாரா' என, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கேட்க, இருவருக்கும் இடையே, சமூக வலைதளங்களில் வார்த்தை போர் நடந்தது.

அப்போது, 'சென்னை கோபாலபுரம், பி.ஜி.ஆர்., எனர்ஜி, மின்சார அமைச்சர் செந்தில் பாலாஜி. இந்த புள்ளிகளை இணைத்து பாருங்கள்; விடை எளிதில் புரியும்' என, அண்ணாமலை 'டுவிட்டர்' பக்கத்தில் பதிவிட்டார்.இந்நிலையில், பி.ஜி.ஆர்., நிறுவனம் சார்பில், அண்ணாமலை மற்றும் செல்வகுமார் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அதில், 'பி.ஜி.ஆர்., நிறுவனம் தொடர்பாக ஆதாரங்கள் இல்லாமல், அவதுாறாக குற்றம் சாட்டியுள்ளீர்கள். எனவே, பி.ஜி.ஆர்., நிறுவனத்திற்கு 500 கோடி ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, அண்ணாமலை கூறியிருப்பதாவது: சார், 500 கோடி ரூபாய்க்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறீர்கள். நான் ஒரு சாதாரண விவசாயி. என்னிடம் இருப்பது சில ஆடுகள் மட்டும் தான். அறிவாலயம் அமைச்சர்களைப் போல, ஊழல் செய்து கொடுப்பதற்கு எதுவுமில்லை.நம்முடைய நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது; சந்திப்போம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nanban - Kajang,மலேஷியா
28-அக்-202108:35:42 IST Report Abuse
Nanban உண்மையிலேயே நெஞ்சில் திறனிருந்தால் நேர்மை துணிவிருந்தால் அயோக்கியன் சீட்டிங் செந்தில் பாலாஜியும், பி ஜி ஆர் நிறுவனமும் அண்ணாமலை மீது வழக்கு தொடரவேண்டும் அப்போது தான் உண்மை வெளியாகும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X