பொது செய்தி

தமிழ்நாடு

25 நாளில் ரூ.23 கோடி ஆவினுக்கு வருமானம்

Added : அக் 27, 2021
Share
Advertisement
சென்னை:தீபாவளி கொண்டாட்டம் எதிரொலியாக, ஆவின் நிறுவனத்திற்கு, 25 நாட்களில் 22.6 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.ஆவின் நிறுவனம் வாயிலாக தினமும், 46 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில், 26 லட்சம் லிட்டர், பால் பாக்கெட்டுகளாக மாற்றி விற்கப்படுகிறது. எஞ்சிய பாலில், தயிர், வெண்ணெய், நெய், பால் பவுடர், ஐஸ்கிரீம், இனிப்புகள், சாக்லேட் உள்ளிட்டவை தயாரித்து
 25 நாளில் ரூ.23 கோடி  ஆவினுக்கு வருமானம்

சென்னை:தீபாவளி கொண்டாட்டம் எதிரொலியாக, ஆவின் நிறுவனத்திற்கு, 25 நாட்களில் 22.6 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.

ஆவின் நிறுவனம் வாயிலாக தினமும், 46 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில், 26 லட்சம் லிட்டர், பால் பாக்கெட்டுகளாக மாற்றி விற்கப்படுகிறது. எஞ்சிய பாலில், தயிர், வெண்ணெய், நெய், பால் பவுடர், ஐஸ்கிரீம், இனிப்புகள், சாக்லேட் உள்ளிட்டவை தயாரித்து விற்கப்படுகிறது.

தீபாவளி பண்டிகையை ஒட்டி, ஆவின் பொருட்கள் விற்பனையை அதிகரிக்க நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதால், விற்பனை மெல்ல சூடுபிடிக்க துவங்கியுள்ளது. ஊழியர்களுக்கு வழங்குவதற்காக, 3.01 கோடி ரூபாய் மதிப்பிலான, 70 டன் இனிப்புகளை போக்குவரத்து துறை கொள்முதல் செய்துள்ளது.இதுமட்டுமின்றி, 8,282 கிலோ சிறப்பு இனிப்புகள், 76.9 லட்சம் ரூபாய்க்கும்; 56 ஆயிரத்து 764 கிலோ வழக்கமான இனிப்புகள், 2.34 கோடி ரூபாய்க்கும்; 2.55 லட்சம் லிட்டர் நெய், 12.1 கோடி ரூபாய்க்கும்; 7,951 கிலோ பாதாம் மிக்ஸ் பவுடர், 30.8 லட்சம் ரூபாய்க்கும் விற்கப்பட்டுள்ளது.

சிறப்பு ஆர்டர்கள் வாயிலாக, 77 ஆயிரத்து 475 கிலோ இனிப்புகள், 3.98 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. இப்பொருட்களின் விற்பனை வாயிலாக, ஆவின் நிறுவனத்திற்கு, 25 நாட்களில் 22.6 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X