சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'மொபைல் ஆப்' வழியே பல கோடி சுருட்டல் ஜார்க்கண்ட் மாநில கொள்ளையர் 3 பேர் கைது

Added : அக் 27, 2021
Share
Advertisement
சென்னை: 'மொபைல் ஆப்' வாயிலாக, நுாதன முறையில் பல கோடி ரூபாய் கொள்ளையடித்த, ஜார்க்கண்ட் மாநில சைபர் கிரைம் கொள்ளை கும்பலைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்துஉள்ளனர்.சென்னை, கோடம்பாக்கத்தை சேர்ந்த ஒருவரின் மொபைல் போன் எண்ணிற்கு, செப்., 29ல், மொபைல் போன் சேவை நிறுவனம் அனுப்பியது போல குறுஞ்செய்தி வந்து உள்ளது.அதில், 'நீங்கள் பயன்படுத்தி வரும் சிம் கார்டு ஆவணங்கள்
 'மொபைல் ஆப்' வழியே பல கோடி சுருட்டல் ஜார்க்கண்ட் மாநில கொள்ளையர் 3 பேர் கைது

சென்னை: 'மொபைல் ஆப்' வாயிலாக, நுாதன முறையில் பல கோடி ரூபாய் கொள்ளையடித்த, ஜார்க்கண்ட் மாநில சைபர் கிரைம் கொள்ளை கும்பலைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்துஉள்ளனர்.

சென்னை, கோடம்பாக்கத்தை சேர்ந்த ஒருவரின் மொபைல் போன் எண்ணிற்கு, செப்., 29ல், மொபைல் போன் சேவை நிறுவனம் அனுப்பியது போல குறுஞ்செய்தி வந்து உள்ளது.அதில், 'நீங்கள் பயன்படுத்தி வரும் சிம் கார்டு ஆவணங்கள் சரிபார்க்கப்படாமல் உள்ளது. 24 மணி நேரத்திற்குள் சரிபார்க்காவிட்டால் சேவை துண்டிக்கப்படும். மேலும் விபரங்களுக்கு இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்' என்ற தகவல் இருந்தது.


அதிர்ச்சி

அந்த எண்ணில் தொடர்பு கொண்ட போது, எதிர்முனையில் பேசிய நபர், 'ஆவணங்களை சரிபார்க்க, www.rechargecube.com என்ற இணையதளத்தில் இருந்து, fast support என்ற மொபைல் ஆப்பை டவுன்லோடு செய்யுங்கள். 'அதில் கேட்கப்பட்டுள்ள வங்கி கணக்கு விபரங்களை பதிவு செய்து, 5 ரூபாய் அனுப்பி வைக்கவும்' என தெரிவித்து உள்ளார்.

அதன்படியே கோடம்பாக்கம் நபர் செய்துள்ளார். எதிர்முனையில் பேசிய நபர் மீண்டும் தொடர்பு கொண்டு, 'பணம் ஏதும் வரவில்லை. நீங்கள் வேறு ஒருவரின் மொபைல் போனில், நான் தெரிவித்த ஆப்பை டவுன்லோடு செய்து, வங்கி கணக்கு விபரங்களுடன், மீண்டும் 5 ரூபாய் அனுப்புங்கள்' எனக் கூறியுள்ளார்.

இதனால், தன் மனைவியின் மொபைல் போனில், மொபைல் ஆப்பை டவுன்லோடு செய்து, வங்கி கணக்கு விபரங்களுடன், 5 ரூபாய் அனுப்பியுள்ளார்.'இந்த பணமும் வரவில்லை. மீண்டும் வேறு ஒருவரின் மொபைல் போனில் இருந்து முயற்சி செய்யவும்' என, அந்த நபர் கூறியுள்ளார்.சில நிமிடங்களுக்கு பின், கோடம்பாக்கத்தை சேர்ந்த நபரின் வங்கி கணக்கில் இருந்து, 90 ஆயிரத்து 134 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. அதன்பின், அவரது மனைவியின் வங்கி கணக்கில் இருந்து, முதலில், 8.60 லட்சம் ரூபாய்; அடுத்து, 3.59 லட்சம் ரூபாயும் எடுக்கப்பட்டு விட்டதாக தகவல் வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரித்தனர். அப்போது, ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்தாரா மாவட்டத்தை சேர்ந்த சைபர் கிரைம் கொள்ளை கும்பல் பணம் பறிப்பதற்காக, 'இணையதளம் மற்றும் மொபைல் ஆப்'பை உருவாக்கி, பண மோசடியில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது.

மேலும், இந்த மோசடி கும்பலை சேர்ந்த மூன்று பேர், கோல்கட்டா மாநிலம், ஹவுரா நகரில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் வினோத்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் ஹவுரா சென்றனர்.அங்கு ஒரு வாரத்திற்கு மேல் முகாமிட்டு, ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்தாரா மாவட்டத்தை சேர்ந்த, சைபர் கிரைம் கொள்ளையர்கள் பிஷ்வநாத் மண்டல், 25, பாபி மண்டல், 31, ராம்புரோஷாத் நாஷ்கர், 30, ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம், மோசடிக்கு பயன்படுத்திய, 20 மொபைல் போன்கள், 160 சிம்கார்டுகள், 19 வங்கி ஏ.டி.எம்., கார்டுகள், 4 ஸ்வைப்பிங் மிஷின்கள், ஹோண்டா சிட்டி கார், 11.20 லட்சம் ரூபாய் ரொக்கம், 18 சவரன் நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.பல மாநில போலீசாருக்கு 'தண்ணி காட்டி' வந்த இந்த கொள்ளை கும்பலை, சென்னை போலீசார் கைது செய்து சாதித்து உள்ளனர்.

கொள்ளையர்கள் தமிழகம், கோல்கட்டா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களிடம், கோடிக்கணக்கில் பணம் சுருட்டி உள்ளனர். கோல்கட்டாவில் பதுங்கி, இதை ஒரு தொழில் போலவே செய்து வந்தது தெரியவந்துள்ளது.3 நாள் காவல்கைதான மூவரையும் போலீசார், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கொள்ளையர்களை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X