அரசியல் செய்தி

தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரள முதல்வருக்கு கடிதம்

Updated : அக் 29, 2021 | Added : அக் 27, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.அதன் விபரம்:மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்குமாறு, எல்லையோர மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை, தமிழக அரசின் குழுவானது உன்னிப்பாக
முல்லைப் பெரியாறு,விவகாரம்,ஸ்டாலின் கடிதம்

சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதன் விபரம்:
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்குமாறு, எல்லையோர மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை, தமிழக அரசின் குழுவானது உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. நேற்று இரவு 9:00 மணி நிலவரப்படி, 137.60 அடியாக நீர்மட்டம் இருந்தது. வினாடிக்கு 2,300 கன அடி நீர் அணைக்கு வருகிறது. 2,300 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
மத்திய நீர்வள ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் அனுமதிக்கப்பட்ட அளவுக்குள்
தற்போதைய நீர்மட்டம் உள்ளது.

அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது குறித்தும், இரு மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் வகையில், முன்கூட்டியே அரசுக்கு தகவல் அளிக்க, அதிகாரிகளை கேட்டுஉள்ளேன். இரு மாநில மக்களின் நலன்களை பேணும் வகையில், தமிழக அரசு செயல்படும் என்பதற்கு உறுதி அளிக்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
28-அக்-202112:33:35 IST Report Abuse
raja விஜயனின் அடிமைன்னு மக்கள் சொல்றாங்க... உண்மைதான்னு நிரூபிக்கிறாங்க விடியலு....
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
28-அக்-202112:23:30 IST Report Abuse
Anand சில தினங்களாக கேரளா மாடலை பார் என எந்த திருட்டு கூட்டமும் கூவ காணோம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X