அரசியல் செய்தி

தமிழ்நாடு

நம்பினால் நம்புங்க... இதுதான் செலவுக்கணக்கு: தேர்தல் ஆணையம் பட்டியல்

Updated : அக் 28, 2021 | Added : அக் 27, 2021
Share
Advertisement
கோவை: சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் செலவிட்ட தொகை குறித்த விபரம், தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் தங்களது செலவுக்கணக்கை தேர்தல் ஆணையத்திடம் கட்டாயம் தாக்கல் செய்தாக வேண்டும்.அதேபோல தேர்தல் செலவுக்கு உச்சவரம்பும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ., தேர்தலில் போட்டியிடுவோர்,
நம்பினால் நம்புங்க... இதுதான் செலவுக்கணக்கு:  தேர்தல் ஆணையம் பட்டியல்

கோவை: சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் செலவிட்ட தொகை குறித்த விபரம், தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் தங்களது செலவுக்கணக்கை தேர்தல் ஆணையத்திடம் கட்டாயம் தாக்கல் செய்தாக வேண்டும்.அதேபோல தேர்தல் செலவுக்கு உச்சவரம்பும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ., தேர்தலில் போட்டியிடுவோர், அதிகபட்சமாக 30 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவிடலாம்.

கோவை மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள் செலவழித்த தொகை, தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தொண்டாமுத்துார் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் வேலுமணி, 22 லட்சத்து 38 ஆயிரத்து 488 ரூபாய் செலவழித்ததாக தெரிவித்துள்ளார். தன் சொந்தப்பணம் 25.29 லட்சம் ரூபாய் பிரசாரத்துக்கு பயன்படுத்தியதாக அவர் கணக்கு காட்டியுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க., வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி, 21 லட்சத்து 5 ஆயிரத்து 47 ரூபாய் செலவிட்டதாக கணக்கு காட்டியுள்ளார்.

கவுண்டம்பாளையத்தில் போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் 20.28 லட்சம், பையாக்கவுண்டர் 18.28 லட்சம் செலவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

கோவை வடக்கில் போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளர் அம்மன் அர்ஜூனன் 23.79 லட்சம் ரூபாயும், தி.மு.க., வேட்பாளர் சண்முகசுந்தரம் 18.87 லட்சம் ரூபாயும் செலவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

கிணத்துக்கடவில் போட்டியிட்ட தி.மு.க., வேட்பாளர் குறிச்சி பிரபாகரன், 15.94 லட்சம் ரூபாயும், அ.தி.மு.க., வேட்பாளர் தாமோதரன் 18.29 லட்சம் ரூபாயும் செலவிட்டதாக தெரிவித்துள்ளனர்.


சொந்த பணம் செலவிட்ட கமல்


கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசன் 27.20 லட்சம் ரூபாய், நடிகர் கமல் 27.39 லட்சம் ரூபாய், காங்., வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் 24.13 லட்சம் ரூபாய் செலவிட்டதாக கணக்கு தாக்கல் செய்துள்ளனர். இதில் நடிகர் கமல், தேர்தல் பிரசாரத்துக்கான மொத்த செலவுத்தொகையும் தன் சொந்தப்பணம் என்று கூறியுள்ளார்.




'மாஜி' எம்.எல்.ஏ., கார்த்திக் செலவழித்தது ரூ.10 ஆயிரமாம்!


கோவை: சிங்காநல்லுார் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க., வேட்பாளரான, முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திக், 10 ஆயிரம் ரூபாய் செலவழித்திருப்பதாக தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, அவரிடம் போனில் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, அதிர்ச்சி அடைந்த அவர், ''பல லட்சம் ரூபாய் செலவழித்திருக்கிறோம். ஆடிட்டர் மூலமாக கணக்கு தாக்கல் செய்யப்பட்டது. தேர்தல் ஆணைய இணையதளத்தில் 'அப்டேட்' செய்ததில் தவறு நடந்திருக்கலாம்,'' என்றார்.

சிங்காநல்லுார் தொகுதியில், நா.கார்த்திக் என்கிற பெயரில் மூன்று வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஒருவர் தி.மு.க., வேட்பாளர், மற்ற இருவர் சுயே., வேட்பாளர்கள். இவர்களில் ஒருவர் தாக்கல் செய்த செலவின பட்டியலை தவறுதலாக, தி.மு.க., வேட்பாளருக்கான பகுதியில் தேர்தல் ஆணைய ஊழியர்கள் தவறுதலாக பதிவேற்றம் செய்திருக்கின்றனர்.

தி.மு.க., வேட்பாளர் கார்த்திக் சமர்ப்பித்த செலவின பட்டியல், சுயே., வேட்பாளருக்கான பக்கத்தில் 'அப்டேட்' செய்யப்பட்டிருக்கிறது.தி.மு.க., வேட்பாளர் கார்த்திக், 24.80 லட்சம் ரூபாய் செலவழித்திருப்பதாக கணக்கு தாக்கல் செய்திருக்கிறார். கட்சியில் இருந்து, 25 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும், சொந்த பணம், 42 ஆயிரத்து, 70 ரூபாய் செலவழித்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.இவருக்கு ஆதரவாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்ததற்கு, ஒரு லட்சத்து, 35 ஆயிரத்து, 835 ரூபாய், உதயநிதி பிரசாரம் செய்ததற்கு, ஒரு லட்சத்து, 10 ஆயிரத்து, 760 ரூபாய் செலவழித்ததாக கணக்கு காட்டியிருக்கிறார்.

வேட்பாளர் கார்த்திக் முதல்கட்டமாக தாக்கல் செய்த செலவு கணக்கில், ஒரு லட்சத்து, 40 ஆயிரத்து, 240 ரூபாய் செலவழித்ததாக,, பதிவேட்டில் குறிப்பிட்டிருக்கிறார்.அவரது பிரசாரத்தை பின்தொடர்ந்து சென்று கண்காணித்த, மறைமுக தேர்தல் செலவின பார்வையாளர், 5 லட்சத்து, 56 ஆயிரத்து, 806 ரூபாய் செலவழித்திருப்பதாக அறிக்கை சமர்ப்பித்திருக் கிறார்.வித்தியாசத் தொகையான, 4 லட்சத்து, 16 ஆயிரத்து, 566 ரூபாயை, வேட்பாளர் செலவு கணக்கில் சேர்த்திருப்பதாக, 'அப்சர்வர்' எழுத்துப்பூர்வமாக பதிவிட்டு, கையெழுத்திட்டிருக்கிறார்.

இவரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஜெயராம், ரூ.20.94 லட்சம் செலவழித்ததாகவும், முன்னாள் முதல்வர் பழனிசாமி பிரசாரம் செய்ததற்கு, ஒரு லட்சத்து, 6,525 ரூபாய், முன்னாள் துணை முதல்வர் பன்னீர்செல்வம் பிரசாரம் செய்ததற்கு, 53 ஆயிரத்து, 165 ரூபாய் செலவழித்ததாகவும் செலவின பட்டியல் சமர்ப்பித்திருக்கிறார்.மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட மகேந்திரன், 13 லட்சத்து, 23 ஆயிரத்து, 507 ரூபாய் செலவழித்ததாக, கணக்கு காட்டியிருக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X