திருப்புல்லாணி : திருப்புல்லாணி ஒன்றிய கூட்டத்தில் கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து தர்ணா செய்தனர்.ஒன்றிய தலைவர் எஸ்.புல்லாணி தலைமை வகித்தார்.
துணைத்தலைவர் சிவலிங்கம் முன்னிலை வகித்தார். ஆணையாளர் ராஜேந்திரன், பி.டி.ஓ., (கி.ஊராட்சி) மேகலா,துணை பி.டி.ஓ., மலைராஜ் உட்பட ஒன்றியக்கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கணக்காளர் சரவணன் தீர்மானங்களை வாசித்தார்.பைரோஸ்கான் 7வது வார்டு: பெரியபட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடத்தை மீட்க கோரி மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அழைப்பு விடுத்தும் வருவதில்லை
இது கண்டிக்கத்தக்கது.துணைத்தலைவர் சிவலிங்கம்: ஒன்றியக்கவுன்சிலர்களுக்கு தெரியாமலேயே, வேலைகள் நடக்கிறது. பி.டி.ஓ.,க்கள் தன்னிச்சையாக வேலைக்கு நிதி ஒதுக்கீடு செய்கின்றனர்.அ.தி.மு.க., கவுன்சிலர்கள் பிரேமா, கமலா, ரஞ்சனி, சுமதி, முனியாயி,நாகநாதன் ஆகியோர் கூறியதாவது; திட்டப்பணிகளுக்கான டெண்டர் விடும் விபரங்களை கேட்கும் போது, ரூ.1 கோடியே 24 லட்சம் மதிப்பீட்டில் கூட்டரங்கில் ஒப்புதல் வைக்கப்பட்டது. தற்போது ரூ.2 கோடியே 20 லட்சத்திற்கு பணிகள் நடந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் மவுனம் சாதிக்கின்றனர்.
அதிகாரிகளின் தன்னிச்சையான போக்கிற்கு கண்டனம் தெரிவிப்பதாக கூறி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருமுருகன் காங்., கவுன்சிலர்: கோரிக்கைகளை ஏற்று முறையாக அனைவருக்கும் திட்டப்பணிகளை வழங்கிட வேண்டும் என கூறி, மன்றக்கூட்டத்தில் படுத்துக்கிடந்தார். ஒன்றியக்கவுன்சிலர்களின் கூச்சல், குழப்பத்தால் தீர்மானங்களை வாசிக்க இயலவில்லை.ஒன்றியக் குழுத்தலைவர் எஸ்.புல்லாணி: முறையாக தபால் மூலம் தெரிவித்தும் தொடர்புடைய அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்காமல் உள்ளனர். இனிவருங்கூட்டத்தில் துறை அலுவலர்கள் பங்கேற்றால், ஒன்றியக்கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE