பரமக்குடி : பரமக்குடியில் விவசாய நிலங்களில் இரண்டு, மூன்று மடங்கு உற்பத்தி மற்றும் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், மானாவாரி நிலத்தில் உற்பத்தித்திறனை
அதிகரிக்கவும், பயிர் சாகுபடி பரப்பை அதிகரிக்கும் வகையில், முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம் செயல்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் 400 எக்டேர் பரப்பில் குதிரைவாலி, கேழ்வரகு, உளுந்து, நிலக்கடலை, எள் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இதற்கான விதைகள், உரங்கள் 50 சத மானியத்தில் வழங்கப்படுகிறது.வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) பாஸ்கர மணியன், பாம்பூர் கிராமத்தில் விவசாயி சண்முகம், முத்துக்குமார் ஆகியோரின் குதிரைவாலி பயிர்களை பார்வையிட்டார்.
மேலும் ஆழ் குழாய் அமைத்தல் மற்றும் கருவேல மரங்களை அகற்றி உழவு செய்ய விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.ஆய்வின்போது பரமக்குடி வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேந்திரன், துணை அலுவலர் சுருளி வேலு, விதை அலுவலர் வெற்றி செல்வம் மற்றும் திவ்யா, சத்யா, சதீஷ் இருந்தனர்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement