பொது செய்தி

தமிழ்நாடு

மண்பாண்ட தொழிலாளர்கள் நிவாரணம் வழங்க கோரிக்கை

Added : அக் 27, 2021
Share
Advertisement
மானாமதுரை : மானாமதுரை மண்பாண்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மழை கால நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.மானாமதுரையில் 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்கள் வருடந்தோறும் மழை காலம் தவிர மற்ற நாட்களில் சீசனிற்கு தகுந்தாற்போல் மண்பாண்ட பொருட்களை தயார் செய்து வருகின்றனர்.கடந்த 2

மானாமதுரை : மானாமதுரை மண்பாண்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மழை கால நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மானாமதுரையில் 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்கள் வருடந்தோறும் மழை காலம் தவிர மற்ற நாட்களில் சீசனிற்கு தகுந்தாற்போல் மண்பாண்ட பொருட்களை தயார் செய்து வருகின்றனர்.கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக 50 சதவீத அளவிற்கு வேலை இல்லாமல் திண்டாடிய இவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது கடந்த 10 நாட்களாக மானாமதுரை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மண்பாண்ட கூடங்களை மழை நீர் சூழ்ந்துள்ளதால் வேலை இல்லாமல் உள்ள இந்த நேரத்தில் மழை கால நிவாரணம் வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X