சென்னை:முதுநிலை மருத்துவப் படிப்பில், அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்த வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கு, முதுநிலை மருத்துவப் படிப்புகளில் 50 சதவீத ஒதுக்கீடு மற்றும் 30 சதவீத ஊக்க மதிப்பெண் வழங்கப்படுகிறது. இதை எதிர்த்து, அரசு சாரா சேவை மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த 11 பேர், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.மனுவில், 'அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவது நியாயமற்றது.
இந்த ஒதுக்கீட்டின் அளவை குறைக்கவில்லை. முறையான ஆய்வு மேற்கொள்ளாமல், இட ஒதுக்கீடு தொடர்ந்து வழங்கப்படுகிறது.'மேலும், 50 சதவீத ஒதுக்கீடு தவிர்த்து, பொது பிரிவிலும் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால், மற்றவர்கள் பாதிக்கப்படுவர்' எனக் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை நவ., 1க்கு நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement