கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சிவசேனா கட்சியினருக்கு எதிரான வழக்கு ரத்து

Added : அக் 28, 2021
Share
Advertisement
மதுரை:'சிவசேனா கட்சியினருக்கு எதிரான வழக்கு ரத்து செய்யப்படுகிறது' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.சிவசேனா கட்சியின் மாநில அமைப்பாளர் ஜெயம் அ.பாண்டியன். இவரது தலைமையில், அக்கட்சியின் பொறுப்பாளர்கள் 2015 ஆக., 9ல், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவனை கண்டித்து, மதுரை கட்டபொம்மன் சிலை அருகே போராட்டம் நடத்தினர். போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக,

மதுரை:'சிவசேனா கட்சியினருக்கு எதிரான வழக்கு ரத்து செய்யப்படுகிறது' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

சிவசேனா கட்சியின் மாநில அமைப்பாளர் ஜெயம் அ.பாண்டியன். இவரது தலைமையில், அக்கட்சியின் பொறுப்பாளர்கள் 2015 ஆக., 9ல், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவனை கண்டித்து, மதுரை கட்டபொம்மன் சிலை அருகே போராட்டம் நடத்தினர். போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக, அவர்கள் மீது மதுரை திலகர் திடல் போலீசார் வழக்கு பதிந்தனர்.

மதுரை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், போலீசார் இறுதி அறிக்கை தாக்கல் செய்தனர். அதை ரத்து செய்யக் கோரி சரவணன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். நீதிபதி ஜி.இளங்கோவன் உத்தரவு:மனுதாரர் உட்பட சிலர், மற்றொரு அரசியல் கட்சி தலைவருக்கு எதிராக போராடி உள்ளனர்.

மற்ற அரசியல்வாதிகளின் கருத்து, செயலை விமர்சிக்கும் அடிப்படை உரிமையை, ஒவ்வொரு கட்சி மற்றும் அதன் உறுப்பினர்கள் ஜனநாயகப்பூர்வமாக பெற்றுள்ளனர் என்பதில் சந்தேகமில்லை. இப்போராட்டத்தால் அசம்பாவிதம் அல்லது சட்டவிரோத நடவடிக்கைகள் நடந்ததாக எதுவும் உறுதி செய்யப்படவில்லை. அமைதியாக போராட்டம் நடந்துள்ளது. சிறு சம்பவத்திற்காக ஆறு ஆண்டுகளாக வழக்கு நிலுவையில் உள்ளது. வழக்கு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X