பொது செய்தி

இந்தியா

பி.டெக்., லேட்ரல் என்ட்ரி இறுதி தரவரிசை வெளியீடு

Added : அக் 28, 2021
Share
Advertisement
புதுச்சேரி-பி.டெக்., லேட்ரல் என்ட்ரி இறுதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.புதுச்சேரி பாலிடெக்னிக் கல்லுாரியில் டிப்ளமோ படித்த மாணவர்களுக்காக, குறிப்பிட்ட சதவீத இடங்கள் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லுாரிகளில் ஆண்டு தோறும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.இவர்கள் பி.டெக்., படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம். இவர்களுக்கான லேட்ரல் என்ட்ரி சேர்க்கை

புதுச்சேரி-பி.டெக்., லேட்ரல் என்ட்ரி இறுதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.புதுச்சேரி பாலிடெக்னிக் கல்லுாரியில் டிப்ளமோ படித்த மாணவர்களுக்காக, குறிப்பிட்ட சதவீத இடங்கள் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லுாரிகளில் ஆண்டு தோறும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.இவர்கள் பி.டெக்., படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம். இவர்களுக்கான லேட்ரல் என்ட்ரி சேர்க்கை விண்ணப்ப படிவங்கள், ஆன்-லைனில் கடந்த மாதம் 16ம் தேதி முதல் 26ம் தேதி வரை பெறப்பட்டது.ஆட்சேபணைகள் பெறப்பட்டு, இறுதி தரவரிசை பட்டியல் நேற்று சென்டாக் இணையதளத்தில் (www.centacpuducherry.in) வெளியிடப் பட்டுள்ளது.விரைவில் முதற்கட்ட கலந்தாய்வு நடத்தி மாணவர்களுக்கு சீட் ஒதுக்கப்பட உள்ளது. மாப் அப் கவுன்சிலிங்கிற்கு பிறகு காலியிடங்கள் இருந்தால், பிற மாநில மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X