பொது செய்தி

இந்தியா

பி.ஆர்க்., படிப்பிற்கு நாளை இறுதி கவுன்சிலிங்

Added : அக் 28, 2021
Share
Advertisement
புதுச்சேரி-பி.ஆர்க்., படிப்பிற்கான இறுதிக்கட்ட கவுன்சிலிங் நாளை நடைபெறும் என சென்டாக் அறிவித்துள்ளது.புதுச்சேரி அரசு பொறியியல் கல்லுாரியில் பி.ஆர்க்., படிப்பில் 20 இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் சென்டாக் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டு, தேசிய அளவில் நடத்தப்படும் 'நாட்டா' நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படுகிறது.இப்படிப்பில் சேர 100க்கும் மேற்பட்ட

புதுச்சேரி-பி.ஆர்க்., படிப்பிற்கான இறுதிக்கட்ட கவுன்சிலிங் நாளை நடைபெறும் என சென்டாக் அறிவித்துள்ளது.புதுச்சேரி அரசு பொறியியல் கல்லுாரியில் பி.ஆர்க்., படிப்பில் 20 இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் சென்டாக் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டு, தேசிய அளவில் நடத்தப்படும் 'நாட்டா' நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படுகிறது.இப்படிப்பில் சேர 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.நாட்டா மதிப்பெண் அடிப்படையில் 28 பேர் கொண்ட தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அடுத்தடுத்து கலந்தாய்வு மூலம் மாணவர்களுக்கு சேர்க்கை இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றது.இந்நிலையில் நாளை 29ம் தேதி, பி.ஆர்க்., படிப்பிற்கு இறுதி கட்ட கவுன்சிலிங் நடைபெறும் என சென்டாக் அறிவித்துள்ளது.இதில், பொது-2, ஓ.பி.சி.,-1, எம்.பி.சி.,-3, எஸ்.சி.,-3, முஸ்லிம்-1 என மொத்தம் 10 சீட்கள் காலியாக உள்ளன. கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்கள் நாளை காலை 9.45 மணிக்குள் சென்டாக் அலுவலகத்தை அணுக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X