பொது செய்தி

இந்தியா

புதிதாக 40 பேருக்கு கொரோனா

Added : அக் 28, 2021
Share
Advertisement
புதுச்சேரி--புதுச்சேரியில் புதிதாக 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.மாநிலத்தில் நுாறு சதவீதம் பேருக்கும் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்து, அதற்கான பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்னதினம் 5,622 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. நேற்று முன்தினம் 3,375 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், 40 பேருக்கு தொற்று உறுதியானது.மாநிலத்தில் தொற்று

புதுச்சேரி--புதுச்சேரியில் புதிதாக 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.மாநிலத்தில் நுாறு சதவீதம் பேருக்கும் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்து, அதற்கான பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்னதினம் 5,622 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. நேற்று முன்தினம் 3,375 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், 40 பேருக்கு தொற்று உறுதியானது.மாநிலத்தில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 846 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் 101 பேரும், வீட்டு தனிமையில் 342 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.நேற்று முன்தினம் குணமடைந்த 50 பேர் உட்பட, இதுவரை ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 546 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். மாநிலத்தில் தொற்று சதவீதம் 1.19 ஆக குறைந்துள்ளது. இறப்பு சதவீதம் 1.45 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 98.20 சதவீதமாக உள்ளது.மாநிலத்தில் நேற்று முன்தினம் 1503 பேர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X