பொது செய்தி

இந்தியா

ஊழியர்களுக்கு போனஸ் சம்மேளனம் வலியுறுத்தல்

Added : அக் 28, 2021
Share
Advertisement
புதுச்சேரி-அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு இரண்டு மாதம் சம்பளம், தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரி அரசு சார்பு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு இதுவரை போனசுக்கான அறிவிப்பு

புதுச்சேரி-அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு இரண்டு மாதம் சம்பளம், தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரி அரசு சார்பு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு இதுவரை போனசுக்கான அறிவிப்பு வெளியிடப்படாமல் உள்ளது. பல அரசு சார்பு மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பல மாதங்களாக ஊதியமே வழங்கப்படாத நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரின்போது அனைத்து பொதுத்துறை மற்றும் கூட்டுறவு நிறுவன ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 2 மாத நிலுவை ஊதியம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், இரண்டு மாத ஊதியம் வழங்குவதற்கான ஆணையோ அல்லது போனசுக்கான ஆணையோ இதுவரை வெளியிடப்படாமல் உள்ளது.முதல்வர் இப்பிரச்சனையில் தலையிட்டு, உடனடியாக அனைத்து அரசு சார்பு பொதுத்துறை மற்றும் கூட்டுறவு நிறுவன ஊழியர்களுக்கு இரண்டு மாத ஊதியம் மற்றும் போனசுக்கான ஆணையை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X