வில்லியனுார்--திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் விடுபட்ட பணிகளை புனரமைக்க பூமி பூஜை நேற்று நடந்தது.மத்திய அரசின் சுற்றுலா தலங்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் மற்றும் வில்லியனுார் கோகிலாம்பாள் சமேத திருக்காமீஸ்வரர் ஆகிய கோவில்களில் விடுபட்ட பணிகளை ரூ.5:54 கோடி செலவில் மேற்கொள்ள பொதுப்பணித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவில் புனரமைப்பு பணிக்கான பூமி பூஜை நேற்று காலை நடந்தது. வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார். சுற்றுலாத் துறை மேலாளர் ராமன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் சாய் சுப்ரமணியன்.உதவி பொறியாளர் மாணிக்கவாசகம், இளநிலைப் பொறியாளர் நல்லமணி, அமைச்சரின் நேர்முக உதவியாளர் மனோகரன், கோவில் சிறப்பு அதிகாரி சீத்தாராமன், கோவில் தலைமை அர்ச்சகர் சரவணன் சிவாச்சாரியார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE