தந்தைக்கு கடன் தொல்லை: அவமானம் தாங்காமல் பள்ளி மாணவர் தற்கொலை

Added : அக் 28, 2021
Share
Advertisement
அரியாங்குப்பம்-தந்தைக்கு கடன் கொடுத்தவர்கள் வீட்டிற்கு வந்து தொல்லை கொடுத்ததால் அவமானம் தாங்க முடியாமல் பள்ளி மாணவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுச்சேரி, அரியாங்குப்பம் டோல்கேட், அரவிந்தர் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன்; டாடா ஏஸ் டிரைவர். இவரது மகன் ரோகித், 15; அரியாங்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். கார்த்திகேயன் தனது

அரியாங்குப்பம்-தந்தைக்கு கடன் கொடுத்தவர்கள் வீட்டிற்கு வந்து தொல்லை கொடுத்ததால் அவமானம் தாங்க முடியாமல் பள்ளி மாணவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுச்சேரி, அரியாங்குப்பம் டோல்கேட், அரவிந்தர் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன்; டாடா ஏஸ் டிரைவர். இவரது மகன் ரோகித், 15; அரியாங்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். கார்த்திகேயன் தனது மகன் படிப்பு மற்றும் குடும்பச் செலவுக்காக கடன் வாங்கியுள்ளார். சுய உதவிக்குழுவில் பணம் வாங்கினார். வருமானம் இல்லாத நிலையில் குழுவிற்கு மாதம் தவணை கட்ட முடியவில்லை. மேலும், கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து அவரது வீட்டிற்கு சென்று பணத்தை கேட்டு தினமும் தொந்தரவு செய்தனர். கடன் கொடுத்தவர்கள் வீட்டிற்கு வந்து தந்தையை அவமானப்படுத்தியதை தாங்க முடியாமல் மனமுடைந்த ரோகித், பெற்றோர் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார் அரியாங்குப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X