பொது செய்தி

இந்தியா

ஆத்துவாய்க்கால் துார் வாரும் பணி எதிர்கட்சி தலைவர் துவக்கி வைத்தார்

Added : அக் 28, 2021
Share
Advertisement
வில்லியனுார்-வில்லியனுார் தொகுதியில் ஆத்துவாய்க்கால் துார் வாரும் பணியை எதிர்க்கட்சித் தலைவர் சிவா துவக்கி வைத்தார்.வில்லியனுார் தொகுதியில் செல்லும் ஆத்துவாய்க்கால் ஆகாயதாமரை செடி, கொடிகள் வளர்ந்து, துார்ந்துபோய் இருந்தது. இதனால் மழைக்காலத்தில் மழைநீர் வெளியேறாமல் குடியிருப்பு பகுதிக்குள் சூழும் நிலை உருவானது. அதையடுத்து, வாய்க்காலை துார் வாருமாறு

வில்லியனுார்-வில்லியனுார் தொகுதியில் ஆத்துவாய்க்கால் துார் வாரும் பணியை எதிர்க்கட்சித் தலைவர் சிவா துவக்கி வைத்தார்.வில்லியனுார் தொகுதியில் செல்லும் ஆத்துவாய்க்கால் ஆகாயதாமரை செடி, கொடிகள் வளர்ந்து, துார்ந்துபோய் இருந்தது. இதனால் மழைக்காலத்தில் மழைநீர் வெளியேறாமல் குடியிருப்பு பகுதிக்குள் சூழும் நிலை உருவானது. அதையடுத்து, வாய்க்காலை துார் வாருமாறு எதிர்க்கட்சி தலைவர் சிவா பொதுப்பணித் துறை நீர்ப்பாசன கோட்ட அதிகாரிகளை வலியுறுத்தினார். அதன்பேரில், ஆத்துவாய்க்கால், மாதா கோவில் வாய்க்கால், கருப்பட்டி வாய்க்கால் ஆகிய வாய்க்கால்கள் சுமார் 7 கி.மீ., துாரத்திற்கு துார்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வி.மணவெளி தண்டுக்கரை பகுதியில் வாய்க்கால் துார் வாரும் பணியை சிவா எம்.எல்.ஏ., துவக்கிவைத்தார். பொதுப்பணித் துறை இளநிலை பொறியாளர் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X