கார் கண்ணாடியை உடைத்து பணம், மொபைல்போன் திருட்டு

Added : அக் 28, 2021
Share
Advertisement
புதுச்சேர-கார் கண்ணாடியை உடைத்து ரூ.15 ஆயிரம் ரொக்கம், மொபைல்போன் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.மதுரை குடிநீர் வினியோகம் குடியிருப்பு காலனி முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் வெற்றிவேல்ராஜன்,25. கட்டுமான கம்பெனி நடத்தி வரும் இவர், நேற்று முன்தினம் புதுச்சேரி வந்தார்.லோரிஸ்தான் வீதி-லுாயிஸ் வீதி சந்திப்பில் தனது பி.எம்.டபிள்யூ (டி.என்.,-22 டி.ஜே.,9091) காரை, காலை

புதுச்சேர-கார் கண்ணாடியை உடைத்து ரூ.15 ஆயிரம் ரொக்கம், மொபைல்போன் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.மதுரை குடிநீர் வினியோகம் குடியிருப்பு காலனி முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் வெற்றிவேல்ராஜன்,25. கட்டுமான கம்பெனி நடத்தி வரும் இவர், நேற்று முன்தினம் புதுச்சேரி வந்தார்.லோரிஸ்தான் வீதி-லுாயிஸ் வீதி சந்திப்பில் தனது பி.எம்.டபிள்யூ (டி.என்.,-22 டி.ஜே.,9091) காரை, காலை 10.௦௦ மணியளவில் நிறுத்திவிட்டு மணக்குள விநாயகர் கோவிலில் நடந்த திருமண விழாவில் பங்கேற்றார்.11.30 மணியளவில் காரை எடுக்க வந்தார். அப்போது காரின் இடது புற கண்ணாடி உடைக்கப்பட்டு, காரில் இருந்த 15 ஆயிரம் ரூபாயுடன் கூடிய கைப்பை, மொபைல் போன் திருடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.இது குறித்து வெற்றிவேல்ராஜன் கொடுத்த புகாரின் பேரில் பெரியக்கடை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X