சிறுமியை சீரழித்த வழக்கு காவலில் விசாரிக்க முடிவு

Added : அக் 28, 2021
Share
Advertisement
புதுச்சேரி-சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு குற்றவாளிகளை பிடிக்க, விபசார தொழில் நடத்திய பெண்ணை காவலில் எடுத்து விசாரிக்க, போலீசார் இன்று மனு தாக்கல் செய்கின்றனர்.புதுச்சேரி அண்ணா நகரில் இயங்கிய மசாஜ் சென்டரில் போலீசார் கடந்த 16ம் தேதி நடத்திய சோதனையில், விபசாரம் நடப்பது தெரிய வந்தது. அங்கிருந்த 4 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். விபசார தொழில் நடத்திய பெண்

புதுச்சேரி-சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு குற்றவாளிகளை பிடிக்க, விபசார தொழில் நடத்திய பெண்ணை காவலில் எடுத்து விசாரிக்க, போலீசார் இன்று மனு தாக்கல் செய்கின்றனர்.புதுச்சேரி அண்ணா நகரில் இயங்கிய மசாஜ் சென்டரில் போலீசார் கடந்த 16ம் தேதி நடத்திய சோதனையில், விபசாரம் நடப்பது தெரிய வந்தது. அங்கிருந்த 4 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். விபசார தொழில் நடத்திய பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட பெண்களின் வயதை பரிசோதனை செய்ததில், ஒருவர் 17 வயது சிறுமி என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றனர். மசாஜ் சென்டருக்கு வந்து சென்ற 40 பேர் மீது உருளையன்பேட்டை போலீசார் 'போக்சோ' வழக்கு பதிந்தனர். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 40 பேரின் மொபைல் எண்களை போலீசார் சேகரித்துள்ளனர். சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய புரோக்கர் பெண் சிறையில் உள்ளார். அப்பெண்ணை, காவலில் எடுத்து விசாரிக்க, உருளையன்பேட்டை போலீசார் இன்று புதுச்சேரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X