திறமையான கலெக்டரை நியமிக்க எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை

Added : அக் 28, 2021
Share
Advertisement
புதுச்சேரி-''புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கை காத்திட திறமையான கலெக்டரை நியமித்திட வேண்டும்'' என அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சிவா கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:புதுச்சேரியில் கொரோனா தொற்று முதலாம் அலை கட்டுக்குள் கொண்டு வந்ததற்கு அப்போதைய கலெக்டர் அருணின் சிறப்பான பணியே காரணம். அவர் களத்தில் நின்று பணியாற்றியதால், கொரோனா தொற்றுக்கு

புதுச்சேரி-''புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கை காத்திட திறமையான கலெக்டரை நியமித்திட வேண்டும்'' என அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சிவா கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:புதுச்சேரியில் கொரோனா தொற்று முதலாம் அலை கட்டுக்குள் கொண்டு வந்ததற்கு அப்போதைய கலெக்டர் அருணின் சிறப்பான பணியே காரணம். அவர் களத்தில் நின்று பணியாற்றியதால், கொரோனா தொற்றுக்கு ஆளானார்.அவருக்கு மாற்றாக, தற்போதைய கலெக்டர் பூர்வா கார்க்கை அப்போதைய கவர்னர் கிரண்பேடி நியமித்தார். புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு, கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் இல்லாததற்கு, இவரது நிர்வாக திறமையின்மையே காரணம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.கொரோனா தொற்று மற்றும் பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கவர்னர் நடத்தும் கூட்டங்களில் கலெக்டர் பங்கேற்கவில்லை. கவர்னரை அவர் அவமதிக்கிறாரா அல்லது கலெக்டரின் செயல்பாட்டில் திருப்தி இல்லாததால் கவர்னர் அழைக்கவில்லையா.குடும்ப தலைவர் இறந்தால், அந்த குடும்பத்திற்கு ராஜிவ்காந்தி சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிதி வழங்குவது கலெக்டரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த நிதி கடந்த 2 ஆண்டாக வழங்கப்படவில்லை.நிர்வாக பணியில் முக்கியமான 16 தாசில்தார்கள், 33 துணை தாசில்தார்கள், 12 கிராம நிர்வாக அதிகாரிகள், 92 கிராம உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்பாததால் அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கான குடியுரிமை, ஜாதி உள்ளிட்ட சான்றிதழ்களை பெற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.மாவட்ட நிர்வாகத்தை சிறப்பாக நடத்திட தனது அதிகாரத்தை பயன்படுத்தாத கலெக்டர் பூர்வா கார்க், தற்போது தனது சுயநலத்திற்காக அதிகாரத்தை பயன்படுத்தி, கலெக்டர் அலுவலக சிறப்பு அதிகாரி நியமனத்தில் விதிமுறையை மீறி தனக்கு வேண்டிய, அனுபவம் இல்லாதவரை நியமித்துள்ளார். இது வருவாய் துறையினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.கலெக்டர், அவரது கட்டுப்பாட்டில் உள்ள பத்திர பதிவு, நிலம் மற்றும் பதிவேடுகள், வருவாய் ஆகிய துறைகளை நிர்வகிக்க தவறியதால் மாநிலத்தின் வருவாயும் கேள்விக்குறியாகி விட்டது.பத்திரப்பதிவு துறையில் போலி பத்திரங்கள் பதிவிடுவது சமீபகாலமாக அதிகரிப்பதும் இவரின் நிர்வாகத் திறமையின்மையை காட்டுகிறது.எனவே மாவட்டத்தில் சிறந்த நிர்வாகத்தை அளித்து சட்டம் ஒழுங்கை காத்திட, திறமையான கலெக்டரை அரசு நியமித்திட வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X