பூட்டிய வீட்டிற்குள் மூதாட்டி பிணம் பெரியக்கடை போலீசார் விசாரணை

Added : அக் 28, 2021
Share
Advertisement
புதுச்சேரி-பூட்டிய வீட்டில், ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல்., பெண் ஊழியர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.புதுச்சேரி தியாகராஜா வீதியில் வாடகை வீட்டில் வசி்த்தவர் ஜீவமணி,68; ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல்., ஊழியர். இவரை, பாரதி வீதியில் வசிக்கும் அவரது மகன் ஞான வேளாங்கண்ணி,47, அடிக்கடி சென்று பார்த்து வருவார்.விபத்தில் சிக்கியதால் கடந்த 25ம் தேதிக்கு

புதுச்சேரி-பூட்டிய வீட்டில், ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல்., பெண் ஊழியர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.புதுச்சேரி தியாகராஜா வீதியில் வாடகை வீட்டில் வசி்த்தவர் ஜீவமணி,68; ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல்., ஊழியர். இவரை, பாரதி வீதியில் வசிக்கும் அவரது மகன் ஞான வேளாங்கண்ணி,47, அடிக்கடி சென்று பார்த்து வருவார்.விபத்தில் சிக்கியதால் கடந்த 25ம் தேதிக்கு பிறகு தாயாரை பார்க்கவில்லை.நேற்று காலை ஜீவமணி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.இது குறித்து அக்கம்பக்கத்தினர் அவரது மகன் ஞான வேளாங்கண்ணிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஜீவமணி சோபாவில் இறந்து கிடந்தார். பெரியக்கடை போலீசார், ஜீவமணியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X