ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை

Added : அக் 28, 2021
Share
Advertisement
புதுச்சேரி-உருளையன்பேட்டை பகுதியில் வசிக்கும் ரவுடிகளின் வீடுகளில், எஸ்.பி., தலைமையில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.புதுச்சேரி, வாணரப்பேட்டையில் கடந்த 24ம் தேதி, ரவுடி பாம் ரவி, அந்தோணி ஆகிய இருவர் வெடிகுண்டு வீசி, வெட்டி கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக சிறையில் உள்ள ரவுடி வினோத் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.கொலை செய்யப்பட்ட பாம் ரவி

புதுச்சேரி-உருளையன்பேட்டை பகுதியில் வசிக்கும் ரவுடிகளின் வீடுகளில், எஸ்.பி., தலைமையில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.புதுச்சேரி, வாணரப்பேட்டையில் கடந்த 24ம் தேதி, ரவுடி பாம் ரவி, அந்தோணி ஆகிய இருவர் வெடிகுண்டு வீசி, வெட்டி கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக சிறையில் உள்ள ரவுடி வினோத் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.கொலை செய்யப்பட்ட பாம் ரவி ஆதரவாளர்கள், பழிக்கு பழியாக ரவுடி வினோத் ஆதரவாளர்களை வெடிகுண்டு வீசி கொலை செய்யலாம் என போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதைத் தொடர்ந்து, உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் ரவுடிகளின் வீடுகளில் நேற்று போலீசார் திடீர் சோதனை நடத்தினர். வெடிகுண்டுகள், ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என சோதனை செய்தனர்.எஸ்.பி., தீபிகா, இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் ரோடியர்பேட், ஆட்டுப்பட்டி, குயவர்பாளையம் பகுதியில் வசிக்கும் ரவுடிகள் வீடுகளில், வெடிகுண்டு கண்டறியும் 'ராம்போ' மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X