தமிழ்நாடு

அகற்றம்: கோர்ட் உத்தரவை மீறி பொருத்தியிருந்த பம்பர்கள்...வாகன தணிக்கையின் போது அதிகாரிகள் அதிரடி

Added : அக் 28, 2021
Share
Advertisement
விழுப்புரம்-விழுப்புரம் மாவட்டத்தில் நான்கு சக்கர வாகனங்களில் நீதிமன்ற உத்தரவை மீறி பொருத்தப்பட்டிருந்த 'புல்பார்' பம்பர்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அகற்றினர். அரசு, வி.ஐ.பி., வாகனங்களில் இருந்த பம்பர்களும் பாரபட்சமின்றி அகற்றப்பட்டன.நான்கு சக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளானால் காரில் உள்ள காற்றுப்பைகள் விரிவடையும். இதனால், வாகனங்களில் செல்வோரின் உயிர்
 அகற்றம்: கோர்ட் உத்தரவை மீறி பொருத்தியிருந்த பம்பர்கள்...வாகன தணிக்கையின் போது அதிகாரிகள் அதிரடி

விழுப்புரம்-விழுப்புரம் மாவட்டத்தில் நான்கு சக்கர வாகனங்களில் நீதிமன்ற உத்தரவை மீறி பொருத்தப்பட்டிருந்த 'புல்பார்' பம்பர்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அகற்றினர்.

அரசு, வி.ஐ.பி., வாகனங்களில் இருந்த பம்பர்களும் பாரபட்சமின்றி அகற்றப்பட்டன.நான்கு சக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளானால் காரில் உள்ள காற்றுப்பைகள் விரிவடையும். இதனால், வாகனங்களில் செல்வோரின் உயிர் காக்கப்படும். ஆனால், வாகனங்களில் பம்பர்கள் பொருத்துவதால், வாகனம் இடிபடும் அதிர்வு சரியாக காற்றுப் பைகளுக்கு கிடைப்பதில்லை.

இதனால், விபத்தில் சிக்கும் வாகனத்தில் இருப்போரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. இதையொட்டி, மத்திய மோட்டார் வாகன சட்டத்தில், நான்கு சக்கர வாகனங்களில் முன் மற்றும் பின் பக்கங்களில், 'புல்பார்' பம்பர்கள் பொருத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.ஆனால், வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனம் சேதமாகக் கூடாது என்பதற்காக பெரும்பாலானோர் பம்பர்களை பொருத்தியுள்ளனர்.விபத்துகளைத் தடுக்கும் வகையில் பம்பர் பொருத்திய வாகனங்கள் மீது போக்குவரத்து துறை எடுத்த நடவடிக்கைகள் சம்பந்தமாக, கடந்தாண்டு டிசம்பர் மாதம், ஐகோர்ட் கேள்வி எழுப்பியிருந்தது.இதையடுத்து, இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் நான்கு சக்கர வாகனங்களில் பம்பர்களை அகற்றுவது தொடர்பாக தமிழக ஆர்.டி.ஓ.,க்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள், சோதனைச் சாவடி, சாலை சந்திப்புகளில் முகாமிட்டு, வாகன தணிக்கை செய்தனர்.அப்போது, பம்பர்களை அகற்றுவது மட்டுமின்றி அபராதம் விதித்து சோதனை அறிக்கைகள் வழங்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.இதையடுத்து, வாடகை வாகன ஓட்டுநர்கள் பலர், அரசு வாகனங்களிலும் இது போன்ற புல்பார் பம்பர்களை அகற்ற வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.துவக்கத்தில், பம்பர்களை தீவிரமாக அகற்றி வந்த போக்குவரத்து துறையினர் பின், அந்த பணிகளில் சுணக்கம் காட்டியதால் மீண்டும் நான்கு சக்கர வாகனங்களில் பம்பர்கள் பொருத்தி ஓட்டும் கலாசாரம் நீடித்தது.இதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் வாகனங்களில் பம்பர் பொருத்த விதித்த தடை தொடரும் என சென்னை ஐகோர்ட் தெரிவித்தது.தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில், வட்டார போக்குவரத்து துறை, காவல் துறையோடு இணைந்து தனியார் வாகனங்கள் மட்டுமின்றி, அரசு, வி.ஐ.பி.,க்களின் நான்கு சக்கர வாகனங்களிலும் இருந்த புல்பார் பம்பர்களை அகற்றும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இதில், விழுப்புரம் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் வாகன தணிக்கை மூலம், 60க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்களில் இருந்த பம்பர்களை அதிரடியாக அகற்றியுள்ளனர்.இதன் மூலம் 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.இதில், சிலர் கோர்ட் வரை சென்று பம்பர்களை அகற்றிக் கொள்வதாக கூறியதன் பேரில், 15 வாகனங்கள் அபராதம் நிர்ணயம் செய்து, அதிகாரிகள் கோர்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.காவல் துறை மூலம் கடந்த ஒரு மாதத்தில் 200க்கும் மேற்பட்ட பம்பர் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வாகன தணிக்கையின் போது போலீசார் மூலம் பம்பர்கள் அகற்றப்பட்டுள்ளது.

விழுப்புரம் வட்டார போக்குவரத்து துறை மூலம் கடந்த ஒரு மாதத்தில் அரசு துறை மற்றும் அரசியல் உள்ளிட்ட வி.ஜ.பி., பிரமுகர்களின் 15 வாகனங்களில் இருந்த பம்பர்கள் அகற்றப்பட்டுள்ளது.ஐகோர்ட் உத்தரவை மீறி மீண்டும் பம்பர்களை பொருத்தி வாகனம் சென்றால், அதன் உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என வட்டார போக்குவரத்து அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X