கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மாற்றுக்கட்சியின் கருத்தை விமர்சிக்க உரிமை உண்டு: உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : அக் 28, 2021
Share
Advertisement
மதுரை:மற்ற அரசியல்வாதிகளின் கருத்து, செயலை விமர்சிக்கும் அடிப்படை உரிமையை ஒவ்வொரு கட்சி மற்றும் அதன் உறுப்பினர்கள் ஜனநாயகப்பூர்வமாக பெற்றுள்ளனர். சிவசேனா கட்சியினருக்கு எதிரான வழக்கு ரத்து செய்யப்படுகிறது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.சிவசேனா கட்சியின் மாநில அமைப்பாளர் ஜெயம் அ.பாண்டியன். இவரது தலைமையில் அக் ட்சியின் பொறுப்பாளர்கள் 2015 ஆக.,9ல் மதுரை

மதுரை:மற்ற அரசியல்வாதிகளின் கருத்து, செயலை விமர்சிக்கும் அடிப்படை உரிமையை ஒவ்வொரு கட்சி மற்றும் அதன் உறுப்பினர்கள் ஜனநாயகப்பூர்வமாக பெற்றுள்ளனர். சிவசேனா கட்சியினருக்கு எதிரான வழக்கு ரத்து செய்யப்படுகிறது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

சிவசேனா கட்சியின் மாநில அமைப்பாளர் ஜெயம் அ.பாண்டியன். இவரது தலைமையில் அக் ட்சியின் பொறுப்பாளர்கள் 2015 ஆக.,9ல் மதுரை கட்டபொம்மன் சிலை அருகே போராட்டம் நடத்தினர். பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தபோது எதிர்ப்புத் தெரிவித்து கருப்புக் கொடி காண்பித்து, விமர்சித்ததாக காங்., முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை கண்டித்து சட்டவிரோதமாகக்கூடி கோஷமிட்டு, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக மதுரை திலகர் திடல் போலீசார் வழக்குப் பதிந்தனர்.
மதுரை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் இறுதி அறிக்கை தாக்கல் செய்தனர். அதை ரத்து செய்யக்கோரி சரவணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். நீதிபதி ஜி.இளங்கோவன் விசாரித்தார்.பொது ஊழியரின் உத்தரவிற்கு கீழ்ப்படியாமல் இருந்ததாகக்கூறி வழக்குப் பதிய போலீசாருக்கு உரிமை இல்லை.

இப்பிரிவில் வழக்குப் பதிய சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்ற அனுமதியை பெறவில்லை என மனுதாரர் தரப்பு கூறுகிறது.மனுதாரர் தரப்பில் சட்டவிரோதமாக கூடினர் என கூற முடியாது. போராட்டத்தால் இடையூறு ஏற்பட்டதாக யாரும் புகார் கொடுக்கவில்லை. போலீஸ் அதிகாரியைத் தவிர வேறு எந்த சாட்சியிடமும் விசாரிக்கவில்லை.மனுதாரர் உட்பட சிலர் மற்றொரு அரசியல் கட்சி தலைவருக்கு எதிராக போராடியுள்ளனர்.

குறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஒன்றுகூட ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு. மற்ற அரசியல்வாதிகளின் கருத்து, செயலை விமர்சிக்கும் அடிப்படை உரிமையை ஒவ்வொரு கட்சி மற்றும் அதன் உறுப்பினர்கள் ஜனநாயகப்பூர்வமாக பெற்றுள்ளனர் என்பதில் சந்தேகமில்லை.

இப்போராட்டத்தால் அசம்பாவிதம் அல்லது சட்டவிரோத நடவடிக்கைகள் நடந்ததாக எதுவும் உறுதி செய்யப்படவில்லை. அமைதியாக போராட்டம் நடந்துள்ளது.சிறு சம்பவத்திற்காக 6 ஆண்டுகளாக வழக்கு நிலுவையில் உள்ளது. வழக்கு ரத்து செய்யப்படுகிறது என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X