பொது செய்தி

தமிழ்நாடு

நவ.4ல் தீபாவளியன்று தங்ககவசத்தில் அம்மன்

Added : அக் 28, 2021
Share
Advertisement
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவ.,4 - 9 வரை கோலாட்ட உற்ஸவம் நடக்கிறது. தீபாவளியன்று அம்மனுக்கு வைரகிரீடமும், தங்ககவசமும், சுவாமிக்கு வைர நெற்றிப்பட்டையும் சாத்துப்படியாகிறது.அக்.,31 அன்று ஐப்பசி பூரம் நடக்கிறது. அன்று காலை 10:00 மணியளவில் அம்மனுக்கும், உற்ஸவ அம்மனுக்கும் ஏற்றி இறக்குதல் சடங்கு நடக்கிறது. நவ.,4 முதல் 9 வரை கோலாட்ட உற்ஸவ நாட்களில் தினமும் மாலை 6:00 மணியளவில்

மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவ.,4 - 9 வரை கோலாட்ட உற்ஸவம் நடக்கிறது. தீபாவளியன்று அம்மனுக்கு வைரகிரீடமும், தங்ககவசமும், சுவாமிக்கு வைர நெற்றிப்பட்டையும் சாத்துப்படியாகிறது.

அக்.,31 அன்று ஐப்பசி பூரம் நடக்கிறது. அன்று காலை 10:00 மணியளவில் அம்மனுக்கும், உற்ஸவ அம்மனுக்கும் ஏற்றி இறக்குதல் சடங்கு நடக்கிறது. நவ.,4 முதல் 9 வரை கோலாட்ட உற்ஸவ நாட்களில் தினமும் மாலை 6:00 மணியளவில் அம்மன், ஆடி வீதியில் எழுந்தருளி சுற்றி வந்து மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் பக்தியுலாத்தி பின் கொலுச்சாவடி சேத்தியாகும். நவ.,8 மாலை 6:00 மணிக்கு அம்மன் வெள்ளி கோ ரதத்தில் ஆடி வீதிகளில் எழுந்தருளுகிறார். நவ.,9 மாலை 6:00 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்சமூர்த்திகளுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளுகின்றனர்.


கந்தசஷ்டி

இந்த உற்ஸவம் நவ.,4 முதல் 9 வரை நடக்கிறது. நவ.,10 காலை 7:00 மணிக்கு கூடல்குமாரருக்கு வெள்ளிகவசம் சாத்துபடியாகி அபிேஷக அலங்காரம், சண்முகார்ச்சனை நடக்கும். நவ., 4 முதல் 10 வரை உபயதாரர் சார்பில் உபய திருக்கல்யாணம், தங்கரதம் உலா கிடையாது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணைகமிஷனர் செல்லத்துரை செய்து வருகின்றனர்.


உண்டியல் திறப்பு


இக்கோயில் மற்றும் உபகோயில்களின் உண்டியல் நேற்று எண்ணப்பட்டன. ரொக்கமாக மொத்தம் ரூ.54 லட்சத்து 38 ஆயிரத்து 266, தங்கம் 323 கிராம், வெள்ளி 815 கிராம், 34 வெளிநாட்டு நோட்டுகள் கிடைக்க பெற்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X