சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நீதிமன்றத்திலிருந்து கைதி தப்பி ஓட்டம்

Added : அக் 28, 2021
Share
Advertisement
மதுரை:மதுரை அவனியாபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன் 25. இவர் மீது கொள்ளை, ஆயுதச் சட்டத்திற்குரிய பிரிவுகளில் அவனியாபுரம் போலீசார் 2017 ல் வழக்குப் பதிந்தனர்.இவர் மதுரை மூன்றாவதுகூடுதல் சார்பு நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. அந்நீதிமன்றத்தில் சரணடைந்து பிடிவாரன்டை ரத்து செய்ய பாலமுருகன் மனு செய்தார். மனுவை தள்ளுபடி செய்து, அவரை

மதுரை:மதுரை அவனியாபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன் 25. இவர் மீது கொள்ளை, ஆயுதச் சட்டத்திற்குரிய பிரிவுகளில் அவனியாபுரம் போலீசார் 2017 ல் வழக்குப் பதிந்தனர்.

இவர் மதுரை மூன்றாவதுகூடுதல் சார்பு நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. அந்நீதிமன்றத்தில் சரணடைந்து பிடிவாரன்டை ரத்து செய்ய பாலமுருகன் மனு செய்தார். மனுவை தள்ளுபடி செய்து, அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

நீதிமன்ற பெஞ்ச் கிளார்க் கிருஷ்ணவேணி, 'பாலமுருகனை நீதிமன்றத்தில் இருக்கச் செய்து விட்டு, ரிமாண்ட் படிவத்தை பூர்த்தி செய்து கொண்டிருந்தபோது, அவர் நீதிமன்ற காவலிலிருந்து தப்பி ஓடிவிட்டார். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X