கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நிதி நிறுவன மோசடி ஜாமின் அனுமதி

Added : அக் 28, 2021
Share
Advertisement
மதுரை:கும்பகோணத்தில் சகோதரர்கள் கணேஷ், சுவாமிநாதன் நிதி நிறுவனம் நடத்தினர். வெளிநாடுகளில் தொழில் செய்கின்றனர். ஹெலிகாப்டர் வைத்துள்ளனர். நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், ஓராண்டில் இரட்டிப்பாக பணம் வழங்கப்படும் என அறிவித்து மக்களிடம் வசூலித்தனர். தொகையை தராமல் ஏமாற்றியதாக பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிந்தனர்.கணேஷ், சுவாமிநாதனுக்கு அடைக்கலம்

மதுரை:கும்பகோணத்தில் சகோதரர்கள் கணேஷ், சுவாமிநாதன் நிதி நிறுவனம் நடத்தினர். வெளிநாடுகளில் தொழில் செய்கின்றனர்.

ஹெலிகாப்டர் வைத்துள்ளனர். நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், ஓராண்டில் இரட்டிப்பாக பணம் வழங்கப்படும் என அறிவித்து மக்களிடம் வசூலித்தனர். தொகையை தராமல் ஏமாற்றியதாக பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிந்தனர்.கணேஷ், சுவாமிநாதனுக்கு அடைக்கலம் கொடுத்ததாக பட்டுக்கோட்டை சோலைசெல்வம் மீது வழக்குப் பதியப்பட்டது. அவர், 'நிறுவனத்திற்கும் எனக்கும் தொடர்பு இல்லை.

நான் டெபாசிட் வசூலிக்கவில்லை. ஜாமின் அனுமதிக்க வேண்டும்,' என உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு செய்தார்.நீதிபதி பி.புகழேந்தி, போலீசாரின் விசாரணையில் திருப்தி இல்லை என அதிருப்தி வெளியிட்டார். மனுதாரருக்கு ஜாமின் அனுமதித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X