சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பட்டாசு விபத்தில் பலி 7 ஆக உயர்வு: பா.ஜ., நிர்வாகி மீது வழக்குப் பதிவு

Added : அக் 28, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சங்கராபுரம்:கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் நேற்று இடிபாடுகளை அகற்றும் போது 11 வயது சிறுவன் உடல் மீட்கப்பட்டது. பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. கடை உரிமையாளர் பா.ஜ. நிர்வாகி மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.சங்கராபுரம் கடை வீதியில் முருகன் ஸ்டோர் என்ற சூப்பர் மார்க்கெட் நடத்தி வருபவர் செல்வகணபதி 47; பா.ஜ. மாவட்ட செயலர். தன்
 பட்டாசு விபத்தில் பலி 7 ஆக உயர்வு: பா.ஜ., நிர்வாகி மீது வழக்குப் பதிவு

சங்கராபுரம்:கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் நேற்று இடிபாடுகளை அகற்றும் போது 11 வயது சிறுவன் உடல் மீட்கப்பட்டது. பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. கடை உரிமையாளர் பா.ஜ. நிர்வாகி மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

சங்கராபுரம் கடை வீதியில் முருகன் ஸ்டோர் என்ற சூப்பர் மார்க்கெட் நடத்தி வருபவர் செல்வகணபதி 47; பா.ஜ. மாவட்ட செயலர். தன் கடைக்கு பின்னால் உள்ள குடோனில் பட்டாசுகளை வைத்திருந்தார்.நேற்று முன் தினம் மாலை 6:30 மணிக்கு மின் கசிவு ஏற்பட்டு பட்டாசு குடோன் தீ பிடித்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அருகில் உள்ள பேக்கரியில் வைத்திருந்த காஸ் சிலிண்டர்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெடித்தன.

இதனால் அடுத்து அடுத்து இருந்த மூன்று கடைகள் இடிந்து தரைமட்டமாகின. செல்வகணபதியின் தாய் வள்ளி 70 மற்றும் 22 - 75 வயதுள்ள ஐந்து ஆண்கள் என ஆறு பேர் உடல் கருகி இறந்தனர். செல்வகணபதி உட்பட 11 பேர் படுகாயமடைந்தனர்.


சிறுவன் உடல்

தீ விபத்தின் போது குடோனின் பின்னால் வீட்டில் இருந்தவர்கள் தப்பியோடினர். அப்போது வீட்டில் இருந்த செல்வகணபதியின் உறவினர் மகன் தனபாலை 11 காணவில்லை. இடிபாடுகளை அகற்றி தேடும் பணி நடந்தது. நேற்று மாலை 3:00 மணியளவில் சிறுவன் உடல் மீட்கப்பட்டது.பேக்கரிக்குள் வெடிக்காமல் இருந்த 16 சிலிண்டர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பு கருதி ஏரியில் வீசப்பட்டன.


நாட்டு வெடிகள்

தீ விபத்து நடந்த இடத்தில் நேற்று காலை எஸ்.பி. ஜியாவுல்ஹக் ஆய்வு செய்தார். அவர் நிருபர்களிடம் கூறுகையில் ''இந்த விபத்தில் வெடித்த வெடிகளின் மாதிரிகள் சேகரிக்கப் பட்டு உள்ளது. இதில் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு வெடிகள் அதிகம் இருந்துள்ளது. போதிய பாதுகாப்பு வசதியின்றி குடோனில் அதிகளவு பட்டாசுகளை சேகரித்து வெடி விபத்திற்கு காரணமான சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் செல்வகணபதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
28-அக்-202106:35:01 IST Report Abuse
NicoleThomson விபத்திற்கும் கட்சி சாயம், அய்யகோ? கட்சி பேதமின்றி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் அய்யா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X