பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி வாகன உரிமம் லஞ்சம் கேட்பதாக புகார்

Added : அக் 28, 2021
Share
Advertisement
சென்னை:பள்ளி வாகன உரிமம் புதுப்பிக்க லஞ்சம் கேட்பதை எதிர்த்து, மறியல் போராட்டம் நடத்த போவதாக, தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது.நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க பொதுச்செயலர் நந்தகுமார் அறிக்கை:நவ., 1ம் தேதி முதல் பள்ளிகளை திறந்து வகுப்பு நடத்தலாம் என, அரசு அறிவித்துள்ளது. இதற்காக, பள்ளி வாகனங்களுக்கு உரிமம் புதுப்பிக்க கேட்டு, தனியார் பள்ளிகள்

சென்னை:பள்ளி வாகன உரிமம் புதுப்பிக்க லஞ்சம் கேட்பதை எதிர்த்து, மறியல் போராட்டம் நடத்த போவதாக, தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது.

நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க பொதுச்செயலர் நந்தகுமார் அறிக்கை:நவ., 1ம் தேதி முதல் பள்ளிகளை திறந்து வகுப்பு நடத்தலாம் என, அரசு அறிவித்துள்ளது. இதற்காக, பள்ளி வாகனங்களுக்கு உரிமம் புதுப்பிக்க கேட்டு, தனியார் பள்ளிகள் தரப்பில், போக்குவரத்து துறை அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளனர்.

சாலை வரி, இருக்கை வரி, உரிமம் புதுப்பிப்பான எப்.சி., போன்றவற்றுக்கு, உரிய கட்டணத்தை பள்ளிகள் செலுத்தியுள்ளன. ஆனால், ஒவ்வொரு வாகனத்தையும் எப்.சி., எனும் ஆய்வு செய்வதற்கு தலா, 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு, வட்டார போக்குவரத்து அலுவலகத்தினர், இடைத்தரகர்கள் வழியே மிரட்டுகின்றனர். லஞ்சம் தராவிட்டால் எப்.சி., செய்ய மறுக்கின்றனர். இதனால், தனியார் பள்ளிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் முதல்வர் மற்றும் தலைமை செயலர் தலையிட்டு, லஞ்சம் பெறாமல் வாகனங்களை எப்.சி., செய்து தர உத்தரவிட வேண்டும். இல்லாவிட்டால் தமிழகம் முழுதும், பள்ளி வாகனங்களை எடுத்து வந்து, ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X