அரசியல் செய்தி

தமிழ்நாடு

நிவாரணம் வழங்க பா.ஜ., வலியுறுத்தல்

Added : அக் 28, 2021
Share
Advertisement
சென்னை:கள்ளக்குறிச்சியில் பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.அண்ணாமலை அறிக்கை:கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் செல்வகணபதி என்பவர் கடையின் மாடியில், தீபாவளி விற்பனைக்காக சேகரித்து வைத்திருந்த பட்டாசுகள் வெடித்தன. இதனால், அருகில் இருந்த பேக்கரியில்

சென்னை:கள்ளக்குறிச்சியில் பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

அண்ணாமலை அறிக்கை:கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் செல்வகணபதி என்பவர் கடையின் மாடியில், தீபாவளி விற்பனைக்காக சேகரித்து வைத்திருந்த பட்டாசுகள் வெடித்தன. இதனால், அருகில் இருந்த பேக்கரியில் காஸ் சிலிண்டர்கள் வெடித்து ஏற்பட்ட தொடர் விபத்தில், ஒன்பதுக்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்தனர்.

தீபாவளி சீசன் என்பதால் பட்டாசு வணிகத்தில் வணிகர்கள் ஈடுபடுவது வழக்கம். அதே சமயம் பட்டாசுகளை சேமித்து வைப்பதிலும், வணிகத்தில் ஈடுபடுவதிலும், அரசு வழிகாட்டு முறையை பின்பற்ற வேண்டும்.இதுபோன்ற விபத்துக்கள், தகுந்த பாதுகாப்பு முறைகளை கடைபிடித்தால் தவிர்க்க முடியும். தீபாவளிக்கு மகிழ்ச்சியை அளிக்கும் பட்டாசுகளை விற்பனை செய்யும் முகவர்கள், விதிகளை மதித்து தகுந்த பாதுகாப்பு நடைமுறைகளை கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும்.

தீ விபத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, பா.ஜ., சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவிக்கும் நேரத்தில், தமிழக அரசு, நிவாரண நிதியாக தலா, 10 லட்சம் ரூபாய் அளிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X